சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிறந்த என்டர்டெயினராக தொடர்ந்து மகிழ்வித்து தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர் அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாக்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

தொடர்ந்து இந்த ஆண்டும் பிளாக்பஸ்டர் படங்களாக கொண்டாட சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் S.J.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள டான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சைன்ஸ்ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள அயலான் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான SK20 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

புத்தாண்டு தினத்தன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயனின் SK20 படத்தை பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப்.K.V. இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் SK20 படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஜதி ரத்னலு என்ற காமெடி என்டர்டெய்னிங் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப் K.V.-யுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. SK20 திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.