சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான லுக்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - வைரலாகும் ‘லால் சலாம்’ Glimpse இதோ..

லால் சலாம் படக்குழு வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் லுக் வைரல் பதிவு இதோ - Superstar rajinikanth Lal salaam Look out now | Galatta

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் கடந்த 2012 ம் ஆண்டு ‘3’ திரைப்படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறிமுகமானார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்திற்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் எழுந்தது. அதன்படி கடந்த 2015 ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார். கலவையான விமர்சனத்தை பெற்றாலும் திரையுலகில் கவனிக்க தக்க இயக்குனரானார். இடையில் ஆல்பம் பாடல்கள், ஆவண படம் என்று இயங்கிய இவர் பின் நீண்ட நாள் கழித்து திரைத்துறையில் மீண்டும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘லால் சலாம்’ என்று பெயரிட்டு முதல் பார்வையை வெளியிட்டனர். படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய பிரவின் ஷங்கர் படத்தொகுப்பு செய்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இதையடுத்து இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவு அதிகரித்தது. பின் தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தில் நடிக்கவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெட்டப் மற்றும் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளது படக்குழு..

நேற்று இரவு 12 மணியாளவில் வெளியான வெளியான முதல் பார்வையில் இஸ்லாமியர் கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் மாஸ் லுக்குடன் நடந்து வரும் காட்சி போல் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதனுடன் ‘மொய்தீன் பாய் - ஆட்டம் ஆரம்பம்’ என்று குறிப்பிட்டு அவரது பெயரினை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அதிகளவு அந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

 

Everyone’s favourite BHAI is back in Mumbai 📍 Make way for #Thalaivar 😎 SuperStar 🌟 #Rajinikanth as #MoideenBhai in #LalSalaam 🫡

இன்று முதல் #மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்…! 💥

🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
🎥… pic.twitter.com/OE3iP4rezK

— Lyca Productions (@LycaProductions) May 7, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தின் அப்டேட் வந்ததால் உற்சாகத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா

"Controversy லாம் வரனும் அப்போதான்.." ஃபர்ஹானா படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ இதோ..

“கடந்த ஒரு வாரமா அழுது கொண்டு இருக்கிறேன்” கதறி அழுத நடிகை சதா..  இணையத்தில் வைரலாகும்  வீடியோ.. பின்னணி இதோ..
சினிமா

“கடந்த ஒரு வாரமா அழுது கொண்டு இருக்கிறேன்” கதறி அழுத நடிகை சதா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. பின்னணி இதோ..

“இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்..” ஃபர்ஹானா படம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்..” ஃபர்ஹானா படம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் – வைரலாகும் வீடியோ இதோ..