“கடந்த ஒரு வாரமா அழுது கொண்டு இருக்கிறேன்” கதறி அழுத நடிகை சதா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. பின்னணி இதோ..

கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை சதா விவரம் இதோ - Actress sadha emotional video viral | Galatta

தமிழ் சினிமாவில் கடந்த 2003 ம் ஆண்டு ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலே ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வந்தார். நடிகை சதா பின் தமிழில் எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலன திரைப்படங்கள் மெகா ஹிட். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்காததால் கடந்த 2019 ம் ஆண்டு மும்பையில் உணவகம் தொழிலில் இறங்கினார்.

நல்ல வரவேற்பை பெற்ற தொழிலில் நடிகை சதா முழு ஈடுபாட்டுடன் இறங்கினார்.எர்த்லிங்ஸ் கபே என்ற பெயரில் தொடங்கப்பட்ட உணவகம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டு நிறைவடைந்த நிலையில் அந்த இடத்திற்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தின் உரிமையாளர் உடனடியாக இடத்தை காலி செய்து தர சொல்லி கேட்க வேறு வழி இல்லாமல் நடிகை சதா அந்த இடத்தை காலி செய்யவுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  சமீபத்தில் லைவில் வந்து தனது ரசிகர்கள் மற்றும் தனது உணவகத்தின் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த செய்தியை  பகிர்ந்தார் அதில்,  "கடந்த ஏப்ரல் மாதம் நில உரிமையாளரிடம் இருந்து இடத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்து தருமாறு நோட்டீஸ் வந்தது. எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலை புரிந்து கொள்ளவே எனக்கு சில காலம் தேவைபட்டது. எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது. அதனால் இந்த இடத்தை காலி செய்ய போகிறோம். நான் கடந்த ஒரு வாரமாக அழுது கொண்டு தான் இருக்கின்றேன். இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன்.. ஆனால் முடியவில்லை.. மே மாதம் இறுதியில் இந்த இடம் எங்களுடையது கிடையாது.

நான் இந்த இடத்திற்கு முதலில் வரும் போது, மோசமான நிலையில் இந்த இடம் இருந்தது.. பின் நான் என்னுடைய எல்லா உழைப்பும் போட்டு இந்த இடத்தை இதுபோல மாற்றியுள்ளேன், அதனால் இந்த இடத்தின் மீது தனி அன்பு உள்ளது. நான் என்னுடைய எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இந்த இடத்திற்காக நேரத்தை செலவிட்டேன். நான் எவ்வளவோ முயற்சித்தும் உரிமையாளர் இதை மறுபரிசீலனை செய்யவில்லை.” என்று கண்ணீர் விட்டு அழுத படி பேசியுள்ளார். இது தொடர்பாக ரசிகர்கள் கடையின் வாடிக்கையாளர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனார். மேலும் சதாவிற்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் இந்த வீடியோவினை வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

A post shared by Sadaa (@sadaa17)

விசில் ரெடியா..! தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni திரைப்படம்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

விசில் ரெடியா..! தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni திரைப்படம்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..

சினிமா

"லோகேஷ் சாரை அவமரியாதை செய்யனும்னு அப்படி செய்யல..” வைரலான காரசாரமான விவாதம் குறித்து விளக்கம் கொடுத்த மணிகண்டன் – முழு வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்.. - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அப்டேட் இதோ...
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்.. - படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அப்டேட் இதோ...