துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு கொடுத்த SUNDAY SPECIAL TREAT... செம்ம ஸ்டைலாக வந்த அட்டகாசமான வீடியோ இதோ!

துருவ் விக்ரமின் பூமதியே மியூசிக் வீடியோ வெளியீடு,dhruv vikram santhosh narayanan poomadhiye music video out now | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த சிறந்த நடிகரான சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தற்போது சர்ப்ரைசாக தனது பூமதியே மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் துருவ் விக்ரம் பாடி, இயக்கி, நடித்துள்ள பூமதியே மியூசிக் வீடியோவிற்கு தமிழ் சினிமாவின் நட்சத்திர பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், துருவ் மற்றும் பாபு ஏ ஸ்ரீவட்சா இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள பூமதியே மியூசிக் வீடியோவிற்கு விஜய் வர்மா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து தனது 2வது படத்தில் தனது தந்தையும் நடிகருமான சீயான் விக்ரமுடன் இணைந்த துருவ் விக்ரம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். 

நடிகராக களமிறங்கிய குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து மாமன்னன் மற்றும் வாழை ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வரும் நிலையில், இதனைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகும் புதிய ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார்

ஆதித்யா வர்மா திரைப்படத்திலேயே பாடகராகவும் இசை மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய துருவ் விக்ரம் தொடர்ந்து மகான் திரைப்படத்திலும் அதை தொடர்ந்தார். அந்த வகையில் சந்தோஷ் நாராயணனின் இசையில் துருவ் விக்ரம் பாடிய மிஸ்ஸிங் மீ எனும் பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனசே எனும் தனது ஆல்பம் பாடலையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். இந்த வரிசையில் தற்போது மீண்டும் சந்தோஷ் நாராயணனுடன் பூமதியே பாடலில் துருவ் விக்ரம் இணைந்துள்ளார்.  ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக உடன் பணிபுரியும் தனது காதலியுடன் உரையாடுவது போலவும் தன் காதலை அவளுக்கு புரிய வைப்பது போலவும் துருவ் விகரமின் அசத்தலான நடன அசைவுகளோடு தற்போது வெளிவந்திருக்கும் இந்த பூமதியே மியூசிக் வீடியோ யூடியூபில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பார்த்தவுடன் பிடிக்கும் வகையில் ஸ்டைலான லுக்கில் துருவ் விக்ரம் அனைவரையும் வசீகரிக்கிறார். செம்ம ஸ்டைலாக வந்த துருவ் விக்ரமின் பூமதியே மியூசிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

தளபதி விஜயின் லியோ ஷூட்டிங்கில் திரிஷாவுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ
சினிமா

தளபதி விஜயின் லியோ ஷூட்டிங்கில் திரிஷாவுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர் & ஃபர்ஸ்ட் லுக்...  லால் சலாம் படக்குழு கொடுத்த பக்கா மாஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர் & ஃபர்ஸ்ட் லுக்...  லால் சலாம் படக்குழு கொடுத்த பக்கா மாஸ் அறிவிப்பு இதோ!

கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி ரக்ஷிதா சுரேஷ்...நடந்தது என்ன?- உயிர் தப்பிய திடுக்கிடும் நொடிகள் பற்றிய விவரம் உள்ளே!
சினிமா

கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி ரக்ஷிதா சுரேஷ்...நடந்தது என்ன?- உயிர் தப்பிய திடுக்கிடும் நொடிகள் பற்றிய விவரம் உள்ளே!