“விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1ரூபாய்..” மாஸ் காட்டிய விஷால் – வைரலாகும் வீடியோ இதோ..

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய நடிகர் விஷால் – Actor Vishal about Farmer here is the video | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். தொடர்ந்து பல அட்டகாசமான கமர்ஷியல் திரைப்பாடங்களை கொடுப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது, நடிகர் சங்க பொதுசெயலாளர் என்று பன்முக திறனுடன் தமிழ் திரையுலகில் கவனம் பெற்று வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மேலும் விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் 2 இறுதிகட்டத்தில் தற்போது உள்ளது. நடிகர் விஷால் திரைத்துறையில் மட்டுமல்லாமல் சமூக செயல்பாட்டிலும் ஆர்வம் கொண்டவர். நிறைய நலதொண்டுகளையும் மக்கள் பணியையும் தனது ரசிகர் மன்றம் மூலம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  நடிகர் விஷால் சென்னையில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிரமாங்கள், கிராம பழக்க வழக்கங்கள், திருவிழா, விவசாயம் என்று பல விஷயங்களால் அமைக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், கூடியிருக்கும் மக்களுடன் இணைந்து மரம் நடுதல், விவசாயம் செய்வது போன்ற சில செயல்பாட்டில் இறங்கினார்.

பின் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், “நான் ஒரு படத்தில் நடிக்கும் போது ஒரு பையன் குடை பிடித்து கொண்டிருந்தான். அவன் பற்றி விசாரிக்கும் போது அவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், காசு இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை அதனால் இந்த வேலைக்கு வந்ததாக சொன்னான். அதனால் நான் முடிவு பண்ணிட்டேன்.. ஏன் விவசாயிகள் கஷ்டபடனும்.. ஏன் விவசாயிகள் ஒவ்வொரு முறை மனு கொடுக்க வரணும்.. அதனால் நீங்க என் படத்திற்காக காசு கொடுத்து எடுக்கும் டிக்கெட்டில்  அரசுக்கு வரி போகின்றது. எல்லா வரிகளும் போன பின் ஒரு தொகை இருக்கும் அதிலிருந்து ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் நான் விவசாயிங்களுக்கு கொடுக்கின்றேன். இதற்கான வழிமுறைகளை செய்கின்றேன். என்னால் எல்லோரையும் காப்பாற்ற முடியாது அதனால் நீங்கள் கொடுக்கும் காசு அதிலிருந்து கொடுக்கின்றேன்.” என்றார் நடிகர் விஷால்.  

“இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்..” ஃபர்ஹானா படம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்..” ஃபர்ஹானா படம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் – வைரலாகும் வீடியோ இதோ..

பொன்னியின் செல்வன் 2 படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் 2 படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

விசில் ரெடியா..! தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni திரைப்படம்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

விசில் ரெடியா..! தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni திரைப்படம்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..