"Controversy லாம் வரனும் அப்போதான்.." ஃபர்ஹானா படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ இதோ..

ஃபர்ஹானா  பட சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - Aishwarya Rajesh about farhana controversy | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.ம் தமிழில் தொடர்ந்து பல முக்கிய நடிகர்களுடன் நடித்தது மட்டுமல்லாமல் கதாநாயகி மையப்படுத்திய கதைக்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து கவனம் பெற்று வருகிறார். அதன்படி இந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. மேலும் வரும் நாட்களில் சியான் விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, ‘மோகன் தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இதனிடையே நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மே12 வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’ ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் ஃபர்ஹானா திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு ஃபர்ஹானா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் அவரது அம்மா குறித்து கேட்டபோது ஐஸ்வர்யா ராஜேஷ்,

“அம்மா எங்களுக்காக நிறைய தியாகம் செய்திருக்காங்க. நாங்க எதுவும் எங்கிட கூடாது னு நினச்சு வளர்த்தாங்க.. குழந்தைகளோட நிறைய படம் பண்ணிருக்கேன். அதுக்கு எல்லாம் எங்க அம்மா தான் ஊக்கம்.  ஒரு நாள் மகளிர் தினத்தின் போது கவர்னர் கையால் எங்க அம்மாக்கு விருது வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் இதை அம்மாவிடம் சொன்னேன். அவங்க ரொம்ப சந்தோஷ பட்டாங்க.. அந்த தருணம் எனக்கும் மகிழ்சிகரமான விஷயமா இருந்தது. அம்மா அவங்க வாழ்க்கையில சந்திச்ச தடைகள். எங்களை வளர்த்து ஆளாக்கிய போது ஏற்பட்ட இழப்புகள்.‌ என்று அவர்களை மேலும் வலிமையானவராய் மாற்றியுள்ளது. அவங்க எந்த விஷயத்திற்கும் பயப்பட்டு நான் பார்த்ததில்லை. கோவிட் நேரத்துல அவங்களுக்கு கோவிட் வந்தப்போ எவ்வளவு பாத்தாச்சு.. இதெல்லாம் ஒண்ணுமில்ல னா சொன்னாங்க.. எனக்கு அந்த நேரம் பயம் கொரோனா பொறுத்தவரை..ஆனால் அவங்க சாதாரணமா அதை கடந்து போனாங்க. ஃபர்ஹானா படத்திற்கு நிறைய சர்ச்சை எழுந்த போதிலும் அவங்க இதெல்லாம் நிறைய வரனும் அப்போதான் படம் நல்லா ஓடும்.. என்று சொன்னார். அவங்க அந்த மாதிரி போல்டான மனிதர்.” என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

மேலும் ஃபர்ஹானா திரைப்படத்திற்கு எழுந்த சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் கேட்டபோது அவர்,  “படம் வந்ததால் புரியும். சர்ச்சை எழுப்புவார்களுக்கு படம் தான் பதில் சொல்லும்.. ஒவ்வொருத்தருக்கு ஒரு எண்ணம் இருக்கும். கருத்து இருக்கும்..  புதுசா பார்க்கும் போது நிறைய விஷயம் தோனும்.. அது இல்லாமல் படம் வரும் போது அவங்க நினைக்குறதுக்கு வேறு மாதிரி இருக்கும்.. சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும்.. " என்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

பொன்னியின் செல்வன் 2 படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் 2 படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

விசில் ரெடியா..! தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni திரைப்படம்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

விசில் ரெடியா..! தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni திரைப்படம்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..

சினிமா

"லோகேஷ் சாரை அவமரியாதை செய்யனும்னு அப்படி செய்யல..” வைரலான காரசாரமான விவாதம் குறித்து விளக்கம் கொடுத்த மணிகண்டன் – முழு வீடியோ இதோ..