கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் ரிலீஸ் தேதி இதோ - PS 2 Trailer release date announced | Galatta

தமிழில் தலைமுறை கடந்து அதிக வாசகர்களை கொண்ட நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். பல காலமாக படமாக்க எடுக்கப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியிலே முடிந்தது. பின் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனரான மணிரத்திரனம் நேர்த்தியாக திட்டமிட்டு நீண்ட நாள் உழைப்பிற்கு பின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக படமாக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றிலே முதல் முறையாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதுவரை இந்தியாவில் யாரும் முயற்சிக்காத முன்னணி நட்சத்திரக் கூட்டணியை ஒன்றிணைத்து அட்டகாசமான திரைப்படமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை படத்திற்காக உருவாக்கியது

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிய இப்படத்தில் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிவர்மன் ஒளிப்பதிவில் தமிழ் சினிமா ஆயிரக்கணகான வருடங்கள் பின் சென்ற அனுபவத்தை கொடுத்தது. மேலும் படத்திற்கு ஸ்ரீதர் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்திருப்பார்.

முதல் பாகத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் 28 ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் ஏ ஆர் ரகுமான் இசையில் முன்னதாக ‘அகநக’ பாடல் வெளியாகி தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் டிரைலர் வெளியீட்டு வரும் மார்ச் 29 தேதி என்று அறிவித்துள்ளது படக்குழு ஆதித்ய கரிகாலன் சியான் விக்ரம் மற்றும் நந்தினி ஐஸ்வர்யா ராய் இடம் பெற்றுள்ள அட்டகாசமான போஸ்டருடன் டிரைலர் தேதி வெளியாகியுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.  

 

Fire in their eyes. Love in their hearts. Blood on their swords. The Cholas will be back to fight for the throne! #PS2TrailerFromMarch29#PS2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @chiyaan #AishwaryaRaiBachchan#PonniyinSelvan2 pic.twitter.com/iShNmBObDg

— Lyca Productions (@LycaProductions) March 24, 2023

ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் லைகா நிறுவனம்.. -  பிரபல ஹீரோவின் புதுப்பட போஸ்டர் இதோ..
சினிமா

ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் லைகா நிறுவனம்.. - பிரபல ஹீரோவின் புதுப்பட போஸ்டர் இதோ..

சினிமா

"பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் LOADING!"- மிரட்டலான வீடியோவோடு வந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

முதல்வரின் பாராட்டை பெற்ற ஆஸ்கார் இயக்குனர்  -  ‘தி எலிபென்ட் விச்பரர்ஸ்’ இயக்குனருக்கு குவியும் வாழ்த்துகள் ..
சினிமா

முதல்வரின் பாராட்டை பெற்ற ஆஸ்கார் இயக்குனர் - ‘தி எலிபென்ட் விச்பரர்ஸ்’ இயக்குனருக்கு குவியும் வாழ்த்துகள் ..