வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..

வெற்றிமாறனின் அடுத்த படத்திற்கு எழுந்த சிக்கல் விவரம் இதோ - Vetri maaran upcoming movie title controversy | Galatta

இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். தொட்ட இடமெல்லாம் துலங்கும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாய் இதுவரை அவர் எடுத்த திரைப்படங்கள் தோல்வியையே சந்திக்காமல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஓபனிங்கை இதுவரை வெற்றிமாறன் பெற்றுள்ளார். நல்ல கதையை நல்ல படைப்பாக மக்களுக்கு கொடுத்து அதனை வர்த்தக ரீதியாக வெற்றியடைய செய்யும் இயக்குனர்களில் வெற்றிமாறன் சிறந்தவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. தற்போது வெற்றி மாறன் எழுத்தாளர் ஜெயமோகன் துணைவன் சிறுகதையை தழுவி விடுதலை என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெளியிடவுள்ளார். படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் விவெற்றிமாறனின் புதிய படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஜீ5 தயாரிப்பில் வெற்றி மாறன் ஒரு தொடருக்கு கதை எழுத அந்த தொடரை அமீர் நடித்து இயக்கவுள்ளார். மேலும் சில எபிசோடுகளை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் அந்த தொடருக்கு ‘நிலமெல்லாம் ரத்தம் என்ற பெயரும் வைக்கப்பட்டது. இந்த தொடருக்கான அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் கடந்தது. இடையில் வெற்றிமாறன் விடுதலை படத்தில் தீவிரமாக இறங்கியதால் இந்த படம் கிடப்பில் கிடந்தது. பின் தற்போது விடுதலை திரைப்படம் வெளியாகவுள்ளதால் நிலமெல்லாம் ரத்தம் தொடருக்கான வேலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் பா.ராகவன் யாசர் அராபத் குறித்து தனியார் இதழுக்கு ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற பெயரில் தொடராக எழுதி வந்தார். அது நூலக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை அந்த புத்தகம் பெற்றது. நீண்ட நாள் கழித்து இந்த தலைப்பை வெற்றிமாறன் அனுமதியில்லாமல் பயன்படுத்துகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து எழுத்தாளர் பா ராகவனும் அவரது முகநூல் பக்கத்தில் எழுதி வந்தார். இருந்தும் வெற்றிமாறன் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் அளிக்காமல் இருப்பதால் தற்போது நீண்ட கட்டுரையாக நடந்த நிகழ்வை எழுதியுள்ளார். அதில்,

“வெற்றிமாறனின் அசோசியேட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பாலா என்று ஒருவர் பேசினார். நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் புத்தகம் இருக்கிற விவரமே எங்கள் தரப்புக்கு தெரியாது என்றார். நல்லது ஐயா எனது பதிப்பாளர் பேசுவார் அவரிடம் இதுகுறித்து பேசிக்கொள்ளுங்கள் என்றேன்' பின் பதிப்பாளர்களிடமும் எழுத்தாளரிடம் சொல்லியதை தான் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியொரு புத்தகம் வந்திருப்பதே தங்களுக்குத் தெரியாது என்று..தீவிரமான வாசகர் என்று திரையுலகமே கொண்டாடும் இயக்குநர் வெற்றிமாறனின் கண்களில் அது இன்றுவரை படாமல் போனது துயரம்தான். கூகுளில் எத்தனை விதமாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து அந்தப் பெயரை அடித்தாலும் குறைந்தது பத்து பக்கங்களுக்கு என் புத்தக விவரங்கள் வந்து விழும். அவர்கள் அதையாவது செய்து பார்த்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் தலைப்பு தெரிந்துவிட்டது அல்லவா எழுத்தாளரிடம் ஒரு வார்த்தை சொல்லி அனுமதி கேளுங்கள் என்று என் தரப்பு சொல்லியும் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் தலைப்பை மாற்றிவிடுகிறோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் இதே தலைப்பைப் பயன்படுத்தினாலும் சரி; வேறு தலைப்பு மாற்றினாலும் சரி. என்னையோ, என் பதிப்பாளரையோ அது பாதிக்கப் போவதில்லை. தவிர, இந்த அற்பச் சுள்ளியைக் கொளுத்திக் குளிர் காயும் விருப்பமோ அவசியமோ எனக்கில்லை. அறிவுஜீவியாக அறியப்படுவோராயினும் தமிழ் சினிமாக்காரர்கள் என்றால் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இன்னுமொரு சாட்சி. அவ்வளவுதான். என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

இது தொடர்பாக இணையத்தில் இயக்குனரும் தீவிர வாசிப்பாளருமான வெற்றிமாறனுக்கு இது தெரியாமல் இருக்குமா? என்று கேள்வியுடன் விமர்சித்து சிலர் வருகிறார்கள். இதன் இறுதியாக இந்த தொடரின் தலைப்பு மாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் வெளியிட்ட பின் சூர்யாவின் வாடிவாசல் இயக்கவுள்ளதாகவும் அது முடிந்து பின் தனுஷ் உடன் மீண்டும் இனணந்து வடசென்னை 2 எடுக்கவுள்ளதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் அமீர் இயக்கவுள்ள 'இறைவன் மிக பெரியவன்' என்ற படத்திற்கும் எழுத்தாளராக பணியாற்றுகிறார் வெற்றிமாறன். இந்த இடைப்பட்ட காலத்தில் அமீரின் நிலமெல்லாம் ரத்தம் எப்போது உருவாகும் என்பதே வெற்றிமாறன் ரசிகரின் கேள்வியாக உள்ளது.

 

சினிமா

"பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் LOADING!"- மிரட்டலான வீடியோவோடு வந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

முதல்வரின் பாராட்டை பெற்ற ஆஸ்கார் இயக்குனர்  -  ‘தி எலிபென்ட் விச்பரர்ஸ்’ இயக்குனருக்கு குவியும் வாழ்த்துகள் ..
சினிமா

முதல்வரின் பாராட்டை பெற்ற ஆஸ்கார் இயக்குனர் - ‘தி எலிபென்ட் விச்பரர்ஸ்’ இயக்குனருக்கு குவியும் வாழ்த்துகள் ..

வில்லாதி வில்லன் கோட்டா ஸ்ரீனிவாசராவ் மரணம்? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வீடியோ.. விவரம் இதோ..
சினிமா

வில்லாதி வில்லன் கோட்டா ஸ்ரீனிவாசராவ் மரணம்? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வீடியோ.. விவரம் இதோ..