தனுஷ் நடித்த படங்களிலே இதுதான் அதிகபட்ச வசூல்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - ‘வாத்தி’ படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் இதோ..

வாத்தி திரைப்படத்தின் புதிய வசூல் அப்டேட் உற்சாகத்தில் ரசிகர்கள் - Dhanush Vaathi becomes a career best collection | Galatta

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி தமிழில் வாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் ரசிகர்களின் பேராதரவோடு வெளியானது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் தெலுங்கு மற்றும் தமிழில் மிகப்பெரிய ஆதரவை பெற்று இன்னும் டிரெண்டிங் கில் இருந்து வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா,சமுத்திரக்கனி, சாய்குமார், கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் பாரதி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாத்தி திரைப்படம் முன்னதாக 100 கோடி வசூலை எட்டியதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் படக்குழு நேற்று அட்டகாசமான வசூல் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற வாத்தி திரைப்படம் இதுவரை 118 கோடிக்கு மேல் உலகளவில் வசூளித்துள்ளதாகவும் இதுவே தனுஷ் திரைப்பயணத்தில் அதிகபட்ச வசூல் என்றும் பெருமையுடன் அறிவித்தது. இதனையடுத்து தனுஷ் ரசிகர்கள் அந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

#Vaathi / #SIRMovie is on fire!🔥

Crossing the ₹118 crore worldwide gross mark!💥🎉

Thank you for the overwhelming response!😇@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @iSumanth @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @7screenstudio @adityamusic pic.twitter.com/vHIp1z4eyi

— Sithara Entertainments (@SitharaEnts) March 17, 2023

வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் பெருமபாலான பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் நேற்று பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது தனுஷின் வாத்தி திரைப்படம்.

தனுஷ் தொடர்ந்து 100 கோடி படங்களை கொடுத்து வருகிறார் தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்பார்ப்பில் இருக்கும் முக்கிய படங்களில் இருந்து வருகிறது. இந்த படமும் தனுஷுக்கு 100 கோடி வசூலை ஈட்டி தரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதன்படி தனுஷ் விரைவில் ஹாட்ரிக் 100 கோடி சாதனை புரிவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு நடந்தது என்ன? -  வருத்ததுடன் ரசிகர்கள் பகிரும் வீடியோ.. - விவரம் இதோ..
சினிமா

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கருக்கு நடந்தது என்ன? - வருத்ததுடன் ரசிகர்கள் பகிரும் வீடியோ.. - விவரம் இதோ..

“வான்கடேவில் தலைவா..” இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

“வான்கடேவில் தலைவா..” இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

“தகுதியற்ற படங்கள் ஆஸ்காருக்கு அனுப்பப்படுகிறது” ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல்.. – ரசிகர்களால் இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...
சினிமா

“தகுதியற்ற படங்கள் ஆஸ்காருக்கு அனுப்பப்படுகிறது” ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல்.. – ரசிகர்களால் இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...