தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன்-சூர்யாவின் வாடிவாசல், இயக்குனர் பாலா-சூர்யாவின் புதிய படம் மற்றும் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் வாத்தி, கார்த்தியின் சர்தார், அருண்விஜயின் யானை, விஷாலின் மார்க் அண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

நடிகராகவும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரு ஜீவி பிரகாஷ் குமார்முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வருகிறார். 

முன்னதாக ஈட்டி படத்தின் இயக்குனர் இயக்குனர் ரவியரசு இயக்கத்தில் ஜீவி நடித்து நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருந்த ஐயங்கரன் திரைப்படம் இன்று மே 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள ஐங்கரன் படத்தை காமன் மேன் நிறுவனம் சார்பில் B.கணேஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில் ஐங்கரன் படத்திலிருந்து Sneak Peek வீடியோ தற்போது வெளியானது.  விறுவிறுப்பான அந்த Sneak Peek வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.