தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெளியில் வாட்டி வதைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. 

அதாவது, தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் சதம் அடித்த நிலையில், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதன் காரணமாக, பலரும் வார இறுதி நாட்களில் சுற்றுலா இடங்குளுக்குச் சென்று, மகிழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கி உள்ளன. 

அப்படி, இன்றைய தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளே திருச்சி, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் காலை முதலே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. 

அத்துடன், கோடை வெயிலின் மிக உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம், இன்று தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 28 ஆம் தேதி வரை வாட்டி வதைக்க உள்ளது. 

அதன்படி, அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள இன்றைய தினம் முதல் நாளே சென்னையில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

சாலையில் வாகனத்தில் செல்லும் போது, வெப்பத்தின் தாக்கமும் அதனால் ஏற்படும் அனல் காற்றின் தாக்கமும் முன்பை விட தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

அத்துடன், இன்றைய தினம் சென்னை அடுத்து உள்ள காஞ்சிபுரத்தில் உச்சக்கட்ட வெயிலின் மிக கடுமையான தாக்கம், உணரப்பட்டு உள்ளது. அங்கு, அனல் காற்றும் வீசி வருவதாகவும், இதனால் காஞ்சி மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் மத்திய நகரமான திருச்சியிலும், முன்பை விட அதிகமான அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருவதாகவும், இதனால் திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் அனல் காற்றின் தாக்கம் முன்பை விட மிக அதிக அளவில் காணப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

அதே போல், ஈரோட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த பகுதியில், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. 

முக்கியமாக, ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.

அதிக வெயில் காரணமாக, “வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க, மிகவும் ஆரோக்கியமான இயற்கை உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம்” என்றும், மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.