தமிழகத்தின் முன்னணி நகைச்சுவை சேனல்களில் ஒன்றான ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் VJ அகல்யா வெங்கடேசன். மேலும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் சின்னத்திரையில் பல சீரியல்களிலும் அகல்யா வெங்கடேசன் நடித்துள்ளார்.

இதனையடுத்து வெள்ளித்திரையிலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த தேவராட்டம், நடிகை ஜோதிகாவின் ராட்சசி மற்றும் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ராஜவம்சம் உள்ளிட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அகல்யா வெங்கடேசன் விரைவில் திரைக்கு வரவுள்ள அருண்விஜயின் யானை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு(2021) அகல்யா வெங்கடேசன், காவல் ஆய்வாளரான அருண்குமார் அவர்களை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அகல்யா வெங்கடேசன்-அருண்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் இவர்களது திருமணம் இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இன்று (மே-4) திருவண்ணாமலையில் நடைபெற்றது. தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசன் திருமணக்கோலத்தில் தனது கணவர் அருண்குமார் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து " Happily Married " என குறிப்பிட்டுள்ளார். அகல்யா வெங்கடேசனின் அந்த செல்ஃபி புகைப்படம் இதோ…