ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் ரேஷ்மா முரளிதரன்.தனது நடிப்பால் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த மதன் பாண்டியனுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர சில மாதங்களுக்கு முன் இவரை கரம்பிடித்தார் ரேஷ்மா.1000 எபிசோடுகளை கடந்த பூவே பூச்சூடவா தொடர் நிறைவடைந்தது.

இதனை அடுத்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாகவும்,மதன் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகின்றனர்.சோனா,ரேஷ்மா பசுபுலேட்டி,பப்பு என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த தொடர் பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை தொடர் ஹீரோ நந்தா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது,இதற்கான ப்ரோமோ ஒன்றையும் கலர்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளனர்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்