“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

மஞ்சிமா மோகன் குறித்து மனம் திறந்த கௌதம் கார்த்திக் - Gautham Karthik about his wife Manjima | Galatta

மிகப்பெரிய திரை அந்தஸ்துடனும் மிகப்பெரிய இயக்குனரின் படத்துடன் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். ஆரம்பத்தில் சில வெற்றி படங்களை கொடுத்த இவர் அதன்பின் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து திரைத்துறையில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டார். பின் கௌதம் கார்த்திக் சிலம்பரசன் நடிப்பில் உருவான பத்து தல திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 30 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிக ஆவலுடன் இருந்து வருகின்றனர். இப்படம் நடிகர் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு மிகப்பெரிய கம் பேக் காக இருக்கும் என்பது திரையுலகினரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் பத்து தல படத்தில் நடித்த நடிகர்கள் கௌதம் காரத்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர். இதில் கௌதம் கார்த்திக் அவரிடம் தோல்வி படங்களில் நடித்தது குறித்து கேட்கையில்,

"நான் தோல்வி படம் பண்ணதால கவலைப்படவில்லை. நான் நிறைய கத்துக்கிட்டேன் அந்த படங்களில் இருந்து. சில படங்கள் பண்ணும்போது அது என்னனே புரியை.. கதை நல்லா இருந்தது பண்ணேன். அதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கும்னு நான் நினைக்கல..   நீங்கள் பைத்தியம், முட்டாள் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள் எனக்கு கவலையில்லை.. அது தப்பு நான் பண்ணேன். அதை நான் புரிந்து கொண்டேன் இதுக்கு பின் அதை பண்ண மாட்டேன்.  நான் ஒரு இடத்தை அடைந்ததற்கு பின் அந்த தப்பை செய்திருந்தால் அது பெரிய விஷயமாக ஆகிருக்கும்.. நான் அப்போ புது நடிகரா இருந்தேன்." என்றார்.

மேலும் நடிகையும் கௌதம் கார்த்திக் அவரின் மனைவியுமான மஞ்சிமா குறித்து மனம் திறந்த கௌதம் கார்த்திக்

“நான் இதுவரைக்கும் அப்பாகிட்ட காசு வாங்குனது இல்ல.. நான் உழைச்சு எனக்கான செலவுகளை பார்த்துக்கிட்டேன் அத நான் பெருமைய சொல்வேன். கொரோனா நேரம் எனக்கு மிகப்பெரிய அடி விழுந்தது. எனக்கு பிடித்த சில விஷயங்களை இழக்க ஆரம்பிச்சிட்டேன். என் பைக் வித்துட்டேன். கார் கொடுத்துட்டேன். என்னிடம் அப்போது ஒன்னுமே இல்லை.

என்னிடம் ஒன்று தான் இருந்தது. அது என் காதல். அந்த காதல் னால என்னால வேலை தேட முடிந்தது.  என்னால நிலைத்திருக்க முடிந்தது.. அந்த காதல் இருந்ததால தான் என்னால மீண்டு வர முடிந்தது. அதனால் தான் என்னால் மீண்டும் ஒரு நிலைக்கு வர முடியும் என்ற எண்ணம் கொடுத்தது‌. உங்களுக்கு அது போல ஒரு காதல் இருந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ஏழையாக இருக்க மாட்டீர்கள்..” என்றார்.

கௌதம் காரத்திக் மஞ்சிமா மோகன் இருவரும் தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அன்றிலிருந்து காதலித்த இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் எளிமையான முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்களின் திருமண புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்தபடி அன்று வைரலாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை உள்ளடக்கிய முழு நேர்காணல் இதோ.. 

அஜித் குமாரின் தந்தை மறைவு ..நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய் – வைரல் வீடியோ இதோ..
சினிமா

அஜித் குமாரின் தந்தை மறைவு ..நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய் – வைரல் வீடியோ இதோ..

'வாரணம் ஆயிரம்' படத்தின் கிட்டாரிஸ்ட் மறைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் -  சோகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

'வாரணம் ஆயிரம்' படத்தின் கிட்டாரிஸ்ட் மறைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் - சோகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார்.. ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வரும் ரசிகர்கள்..  விவரம் இதோ..
சினிமா

நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார்.. ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வரும் ரசிகர்கள்.. விவரம் இதோ..