நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார்.. ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வரும் ரசிகர்கள்.. விவரம் இதோ..

நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார் - Actor Ajith Kumar Passed away | Galatta

தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் குமாருக்கு இந்த 2023 மிகப்பெரிய வெற்றியுடன் துவங்கியது. எச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூலை அவருக்கு பெற்று தந்தது. அவரது அடுத்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் இயக்குனர் மகிழ் திருமேனி லைகா தயாரிப்பில் AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. வெற்றியுடன் இந்த ஆண்டை தொடங்கிய நடிகர் அஜித்க்கு பெரும் அடியாய் அவரது தந்தை மரணம் அமைந்துள்ளது.

நடிகர் அஜித் குமார் அவரது தந்தை சுப்பிரமணியம் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணமடைந்துள்ளார். மறைந்த சுப்பிரமணியம் அவர்களுடைய சொந்த ஊர் பாலக்காடு அவருக்கு தற்போது 86 வயது நடைபெற்று கொண்டிருந்தது. சமீப காலமாக வயது முதிர்ச்சி காரணமாக அவருக்கு சில உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு வீட்டிலே சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் பெசண்ட்நகர் பகுதியில் இருக்கும் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர செய்தியையடுத்து நடிகர் அஜித் மீது அன்பு இருக்கும் ரசிகர்கள் அங்கு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அஜித் அவரது வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

மேலும் அஜித் அவரது தந்தை மறைந்ததையடுத்து அஜித் சார்பில் அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்,

“எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” என்று அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அனுப் குமார், அனில் குமார் சார்பில் தெரிவித்துள்ளனர்.

pic.twitter.com/VDAIxpagDW

— Suresh Chandra (@SureshChandraa) March 24, 2023

இந்த மீளா துயரத்தில் இருந்து மீண்டு வர அஜித் அவர்களும் அவரது குடும்பதார்களுக்கும் மன தைரியம் கொடுக்கும் அளவு அவரது லட்சக் கணக்கான ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அரசியல் முக்கிய பிரமுகர்கள் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். மற்றும் அஜித் அவரது தந்தை சுப்பிரமணியம் அவரது ஆன்மா சாந்தியடைய கலாட்டா தமிழ் மீடியா சார்பில் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்..

“தையல் போட இடமே இல்ல..” விடுதலை படத்தில் சண்டை காட்சிகளில் நடித்தது குறித்து சூரி பகிர்ந்து கொண்ட தகவல் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“தையல் போட இடமே இல்ல..” விடுதலை படத்தில் சண்டை காட்சிகளில் நடித்தது குறித்து சூரி பகிர்ந்து கொண்ட தகவல் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு  – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான glimpse இதோ..
சினிமா

சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களால் வைரலாகும் அட்டகாசமான glimpse இதோ..

வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி..  - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி.. - ‘விடுதலை’ படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி.. சிறப்பு நேர்காணல் இதோ..