அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..

அமீர் யுவன் கூட்டணியில் புதிய படம் - Ameer yuvan team up for new project | Galatta

இளைஞர்களை கவர நாளுக்கு நாள் தன் இசையை புதுப்பித்து கொண்டே இருக்கும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. 90 களில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து காலம் கடந்தும் அந்த பாடல்களை இளைஞர்கள் இன்றும் வைப் செய்யுமளவு அசாத்திய இசைக்கு சொந்தக் காரார் இவர். பல இசை ஜாம்பவான்கள் திரைத்துறையில் இருக்கும்போதே தன்னை நிருபித்து அசத்தியவர். ஹீரோவிற்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்ட  யுவன் ஷங்கர் ராஜா கடந்த ஆண்டு ‘விருமன்.’நானே வருவேன்,’லவ் டுடே, ‘காபி வித் காதல், ‘லத்தி, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். இதில் பெரும்பாலான படங்கள் இசை அடிப்படையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கஸ்டடி' திரைப்படத்திற்கும் இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கும் ‘ஆண்டவர் திரைப்படத்திற்கும் அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்திற்கும் மற்றும் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இறைவன்' படத்திற்கும் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சூரி நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை, இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து வெளியாகவிருக்கும் ‘பொம்மை படத்திற்கும் மற்றும் 'குக் வித் கோமாளி' புகழ் நடிப்பில் உருவாகும் 'மிஸ்டர் சூ கீப்பர்' படத்திற்கும்   மற்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை மட்டுமல்லாமல் திரைப்படங்கள் தயாரித்து வருவதிலும் சிறந்து விளங்குகிறார். அதன்படி YSR Films என்ற பெயரில் ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்து இசையமைத்தார். திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க யுவன் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் தனது பயனத்தை தொடர்ந்தார். அதன்படி கடந்த ஆண்டு விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் வெளிவந்த ‘மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார். வசூல் ரீதியாக கை கொடுக்கவில்லை என்றாலும் உலக மேடைகளை இன்னும் அலங்கரித்து கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் YSR Films நிறுவனமும் இயக்குனரும் நடிகருமான அமீர் அவர்களின் அமீர் பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் புதிய படத்திற்காக இணைந்துள்ளது என்ற செய்தியினை யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Happy to announce that @YSRfilms & Ameer Film Corporation are joining hands together for a new venture. Stay tuned for more details! 😊 pic.twitter.com/SAHZitra55

— Raja yuvan (@thisisysr) March 24, 2023

இவர்களின் கூட்டணியில் இதற்கு முன்பு அமைந்த ‘மௌனம் பேசியதே,’ராம், ‘பருத்திவீரன்,’யோகி, ‘ஆதி பகவன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன் படத்திற்கும்  வெற்றி மாறன் எழுத்தில் ஜீ5 தயாரித்து அமீர் இயக்கும் ‘நிலமெல்லாம் ரத்தம் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் அமீர் - யுவன் கூட்டணி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்யப்படலாம் அல்லது புதிய படமாக அது இருக்கலாம் என்ற கருத்து தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இருந்தாலும் அமீர் யுவன் கூட்டணிக்கும் மிகப்பெரிய அளவு வரவேற்பு தற்போது இணையத்தில் கிடைத்துள்ளது.

'வாரணம் ஆயிரம்' படத்தின் கிட்டாரிஸ்ட் மறைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் -  சோகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

'வாரணம் ஆயிரம்' படத்தின் கிட்டாரிஸ்ட் மறைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் - சோகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார்.. ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வரும் ரசிகர்கள்..  விவரம் இதோ..
சினிமா

நடிகர் அஜித் குமார் தந்தை காலமானார்.. ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வரும் ரசிகர்கள்.. விவரம் இதோ..

கடும் குளிரில் உருவான லியோ திரைப்படம்.. படக்குழுவினரை கவுரவிக்கும் விதத்தில் வெளியான சிறப்பு வீடியோ இதோ..
சினிமா

கடும் குளிரில் உருவான லியோ திரைப்படம்.. படக்குழுவினரை கவுரவிக்கும் விதத்தில் வெளியான சிறப்பு வீடியோ இதோ..