தென்னிந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் பத்திரிகை நிறுவனமாக வருவது நமது கலாட்டா நிறுவனம்.20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தரமான நம்பத்தக்க அரசியல்,சினிமா,விளையாட்டு என பல செய்திகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறோம்.இணையத்தளம்,யூடியூப் என எங்களை தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை தாண்டி பல துறைகளில் இருக்கும் பல சாதனையாளர்களை கலாட்டா கௌரவிக்க ஒருபோதும் தவறியதில்லை.அப்படி பல துறைகளில் சாதிக்கும் பலருக்கும் விருதுகள் வழங்கி கலாட்டா சிறப்பித்துள்ளது..சில மாதங்களுக்கு முன் இதுவரை தென்னிந்திய அளவில் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு பிரம்மாண்ட விழாவாக The Galatta Crown 2022 விருது விழாவை நடத்தி அசத்தினோம்.

இதனை தவிர Wonder woman,தொலைக்காட்சி விருதுகள் என பல விருதுகளை அளித்து பல பிரபலங்களையும்,நட்சத்திரங்களையும் கௌரவித்துள்ளோம்.அந்த வரிசையில் அடுத்ததாக டிஜிட்டல் யுகத்தில் கலக்கும் பலரையும் கௌரவிக்கும் படி கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022 என்ற விருது நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம்.

பல துறைகளில் யூடியூப்பில் பட்டையை கிளப்பி உங்கள் மனம் கவர்ந்து வரும் நட்சத்திரங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுகள் வாங்கவுள்ளனர்.இந்த விருது விழா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோஸில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.இதற்கான டிக்கெட் புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த விருது விழாவினை ரசிகர்கள் நேரில் கண்டு மகிழ டிக்கெட்டினை கீழே உள்ள லிங்கில் புக் செய்யலாம்

Galatta Digital Stars Awards 2022 Ticket Booking