விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் தொடங்கி பல விறுவிறுப்பான திருப்பாங்களோடு TRP-யில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.

இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலங்களாக மாறிவிட்டனர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அசத்தி வந்தார் தொடரில் முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வரும் Farina,அப்போது ரசிகர் ஒருவர் பாரதி கண்ணம்மா தொடர் நிறைவடைகிறதா என்று கேட்டார் அதற்கு பதிலளித்த அவர் இவ்ளோ சீக்கிரம் முடிக்கமாட்டோம் வெயிட் பண்ணுங்க என்று தெரிவித்துள்ளார்.வெண்பா கதாபாத்திரத்தை போல யாரையும் நேரில் பார்த்தால் அடித்து பல்லை உடைத்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.