விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்த சஞ்சீவ் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஆல்யா மானசா.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ஐலா சையத் என்று இருவரும் பெயரிட்டுள்ளனர்.குழந்தையின் கியூட் வீடீயோவை அவ்வப்போது இருவரும் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர்.

அடுத்ததாக சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி தொடரில் நடித்து வந்தார்.பிரியங்கா எம் ஜெயின் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார்.மனோகரா கிருஷ்ணன் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவுக்கு வந்தது.இதனை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் சஞ்சீவ்.

சஞ்சீவ் தான் நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பெற்றதும் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.தற்போது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பெற்றுள்ள சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒரு சீரியலில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.சீரியல் குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

raja rani fame sanjeev karthick confirms doing a new serial in sun tv