இன்று இணையத்தை அதிரவைத்த பலரை துக்கமாக்கிய ஒரு செய்தி பிரபல தொகுப்பாளினியும்,சீரியல் நடிகையுமான சித்ராவின் மரணம்.அதிகாலை ஷூட்டிங்கை முடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.சித்ரா எப்போதும் துறுதுறுவென ஏதேனும் ஒன்றை செய்து கொண்டு ,தனது ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டு அதிகப்படியான நேரத்தை செலவிடுவார்.ரசிகர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கூட செய்துள்ளார் சித்ரா.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பது , ஏதேனும் போட்டோ வீடியோ என்று எதையாவது ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்வது என்று செம ஜாலியாக இருப்பார் சித்ரா.சீரியல்களிலும்,நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொள்கிறார் என்றாலே அது களைகட்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்வார்கள்.அப்படி நேற்றும் ஒரு ஷோவில் கலந்துகொண்டிருந்தார் சித்ரா.

இவருடன் இணைந்து இந்த ஷோவில் கலந்துகொண்ட மற்றொரு நடிகை சரண்யா ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதனையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சித்ரா பதிவிட்டிருந்தார்.எல்லாம் நார்மலாக சென்றுகொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பல கஷ்டங்களை சந்தித்து போராடி வெற்றி பெற்ற சித்ராவிற்கு தற்போது அப்படி என்ன கஷ்டம் வந்துவிட்டது என்று ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.அவர் பதிவிட்ட ஸ்டோரியே இன்னும் மறையவில்லை அதற்குள் அவரது வாழ்க்கை இப்படி மாறிவிட்டது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.பல ரசிகர்களை மகிழ்வித்த சித்ரா இன்று அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.

Fans shocking reaction to Pandian Stores fame Chithu VJ Death

சித்ராவோட ஸ்டோரியே இன்னும் போகல அதுக்குள்ள...கண்ணீர்க்கடலில் ரசிகர்கள் !

அதுக்குள்ள இப்படி ஆகும்ன்னு எதிர்பார்க்கல ! சித்ராவிற்காக கலங்கும் ரசிகர்கள் 

இன்று இணையத்தை அதிரவைத்த பலரை துக்கமாக்கிய ஒரு செய்தி பிரபல தொகுப்பாளினியும்,சீரியல் நடிகையுமான சித்ராவின் மரணம்.அதிகாலை ஷூட்டிங்கை முடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.சித்ரா எப்போதும் துறுதுறுவென ஏதேனும் ஒன்றை செய்து கொண்டு ,தனது ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டு அதிகப்படியான நேரத்தை செலவிடுவார்.ரசிகர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கூட செய்துள்ளார் சித்ரா.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பது , ஏதேனும் போட்டோ வீடியோ என்று எதையாவது ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்வது என்று செம ஜாலியாக இருப்பார் சித்ரா.சீரியல்களிலும்,நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொள்கிறார் என்றாலே அது களைகட்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்வார்கள்.அப்படி நேற்றும் ஒரு ஷோவில் கலந்துகொண்டிருந்தார் சித்ரா.

இவருடன் இணைந்து இந்த ஷோவில் கலந்துகொண்ட மற்றொரு நடிகை சரண்யா ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதனையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சித்ரா பதிவிட்டிருந்தார்.எல்லாம் நார்மலாக சென்றுகொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பல கஷ்டங்களை சந்தித்து போராடி வெற்றி பெற்ற சித்ராவிற்கு தற்போது அப்படி என்ன கஷ்டம் வந்துவிட்டது என்று ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.அவர் பதிவிட்ட ஸ்டோரியே இன்னும் மறையவில்லை அதற்குள் அவரது வாழ்க்கை இப்படி மாறிவிட்டது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.பல ரசிகர்களை மகிழ்வித்த சித்ரா இன்று அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.

A post shared by Troller Memes™ || 15k (@trollermemez)