சக ரைடருக்கு BMW சூப்பர் பைக்கை சர்ப்ரைசாக பரிசளித்த அஜித் குமார்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

சக ரைடருக்கு BMW சூப்பர் பைக்கை சர்ப்ரைசாக பரிசளித்த அஜித் குமார்,ajith kumar gifted bmw superbike to his co rider sugat satpathy | Galatta

தென்னிந்தியாவின் ஈடு இணையற்ற மாஸ் ஹீரோவாக திகழும் நடிகர் அஜித்குமார் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தன்னோடு இணைந்து பயணித்த சக ரைடருக்கு தற்போது விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சூப்பர் பைக் ஒன்றை சர்ப்ரைஸாக அஜித்குமார் பரிசளித்திருக்கிறார். முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனது திரைப் பயணத்தில் 62 வது திரைப்படமாக அஜித் குமார் நடிக்கும் AK62  திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சில காரணங்களால் அவர் விலகியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாகவும் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க இருக்கிறார். வருகிற ஜூம் இரண்டாவது வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக “பரஸ்பர மரியாதைக்கான பயணம்” என்ற பெயரில் உலக பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கிய அஜித்குமார் அதன் முதல் பகுதியாக நேதாளம் பகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த மே 8ஆம் தேதியோடு இந்த சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பரில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதனிடையே விடாமுயற்சி திரைப்படத்தில் தன் பகுதிக்கான படப்பிடிப்பை அஜித்குமார் நிறைவு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது “ஏகே மோட்டா ரைடு” என்ற புதிய மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தது. சமீபத்தில் நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்குமார் அவர்கள் முன்னதாக சிக்கிமில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு கொடுத்து உடன் சக ரைடராக பயணம் செய்தவர் சுகத் சத்பதி. மேலும் இவர்கள் இணைந்து நேபாளம் மற்றும் பூடானில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது சக ரைடர் சுகத் சத்பதிக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கிட்டத்தட்ட 13 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த BMW F 850 GS ரக பைக்கை அஜித்குமார் பரிசளித்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சுகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் வழங்கிய புதிய பிஎம்டபிள்யூ சூப்பர் பைக் உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு கடந்த 2022 ஆம் ஆண்டில் அஜித்குமார் அவர்களை சிக்கிமில் சந்தித்தது குறித்தும் அவரோடு இணைந்து பயணம் செய்தது குறித்தும் பதிவிட்டு, தன்னை தம்பி போல அஜித் குமார் பார்த்துக் கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். சுகத் சத்பதியின் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Lincon Mohanty (@lincon_mohanty)

 

 

View this post on Instagram

A post shared by Sugat Satpathy (@wanderlustsatpathy)

 

View this post on Instagram

A post shared by Kapil Jack (@kapiljack)

அசோக் செல்வன்-சரத்குமாரின் அதிரடியான போர் தொழில்... தெகிடி வரிசையில் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

அசோக் செல்வன்-சரத்குமாரின் அதிரடியான போர் தொழில்... தெகிடி வரிசையில் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!

சினிமா

"மலேசியாவில் மாஸ் காட்டிய விஜய்!"- ஷூட்டிங்கிற்கு முன்பே தளபதி68 இன்டர்நேஷனல் ப்ரோமோஷன் ஆரம்பம்! விவரம் இதோ

இதுவரை பார்த்திராத காட்சிகளுடன் வந்த பொன்னியின் செல்வன் 2 சர்ப்ரைஸ்... அட்டகாசமான புது வீடியோ இதோ!
சினிமா

இதுவரை பார்த்திராத காட்சிகளுடன் வந்த பொன்னியின் செல்வன் 2 சர்ப்ரைஸ்... அட்டகாசமான புது வீடியோ இதோ!