RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!

RJபாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ரிலீஸ் அறிவிப்பு - புது போஸ்டர்,rj balaji in singapore saloon movie release plan announced | Galatta

தனது அடுத்த பக்கா என்டர்டெய்னராக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது. பிரபலமான ரேடியோ ஜாக்கியாக ரசிகர்கள் மனதை கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜி பின்னர் திரையுலகிலும் நடிகராக களமிறங்கி வரிசையாக பல சூப்பர் ஹிட் படங்களில் அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்தார். இதனை அடுத்து LKG திரைப்படத்திலிருந்து முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோவாக தனக்கென தனி பாணியில் குறிப்பிடப்படும் என்டர்டைனிங் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த ஆர்.ஜே.பாலாஜி அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களை இணை இயக்குனராக இயக்கி கதாநாயகனாக நடித்தார். மிக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும், பாலிவுட்டில் வெற்றி பெற்ற பத்தாய் ஹோ படத்தின் ரீமேக்கான வீட்ல விசேஷம் படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 

கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த ரன் பேபி ரன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்தது. தனது வழக்கமான கதை களத்தில் இருந்தும் கதாபாத்திரங்களில் இருந்தும் மாறுபட்டு, அழுத்தமான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த விறுவிறுப்பான த்ரில்லர் படமாக வெளிவந்த ரன் பேபி ரன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த வரிசையில் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் புதிய போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புதிய போஸ்டரில் இருந்து சிங்கப்பூர் சலூன் படத்தில் மீனாட்சி சௌத்ரி மற்றும் ஆன் ஷீத்தல் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு மீண்டும் சத்யராஜ், ஆர்.ஜே.பாலாஜி உடன் இணைந்திருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் லால், ரோபோ சங்கர் முதலும் நீ முடிவும் நீ பட நடிகர் கிஷன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சுகுமார்.M ஒளிப்பதிவில் விவேக் - மெர்வின் இசையமைக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். ஜாவத் ரியாஸ் பின்னணி இசை சேர்த்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி. கே .கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் பக்கா என்டர்டைனிங் திரைப்படமாக ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், விரைவில் ரிலீஸ் தேதி இதர அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஜூலை மாதத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் வெளிவந்த இந்த கலக்கலான புதிய போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Presenting the breezy second look of @RJ_Balaji 's #SingaporeSaloon
Releasing July 2023 Worldwide

Directed by @DirectorGokul
Produced by @VelsFilmIntl @IshariKGanesh #Sathyaraj #Lal @Meenakshiioffl @annsheetal1 #RoboShankar #JohnVijay @Ashkum19 @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/wWqGfA5xC5

— Vels Film International (@VelsFilmIntl) May 23, 2023

சினிமா

"மலேசியாவில் மாஸ் காட்டிய விஜய்!"- ஷூட்டிங்கிற்கு முன்பே தளபதி68 இன்டர்நேஷனல் ப்ரோமோஷன் ஆரம்பம்! விவரம் இதோ

இதுவரை பார்த்திராத காட்சிகளுடன் வந்த பொன்னியின் செல்வன் 2 சர்ப்ரைஸ்... அட்டகாசமான புது வீடியோ இதோ!
சினிமா

இதுவரை பார்த்திராத காட்சிகளுடன் வந்த பொன்னியின் செல்வன் 2 சர்ப்ரைஸ்... அட்டகாசமான புது வீடியோ இதோ!

சினிமா

"விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68ல் இருக்கிறீர்களா?"- சுவாரஸ்யமாக பதிலளித்த ஜெய்... ட்ரெண்டிங் வீடியோ இதோ!