“ஃபர்ஹானா படத்தில் ஏன் மெட்ரோ?” அட்டகாசமான வீடியோவுடன் இயக்குனர் கொடுத்த விளக்கம்.. – வைரலாகும் வீடியோ இதோ..

ஃபர்ஹானா படக்குழு வெளியிட்ட படப்பிடிப்பு சிறப்பு வீடியோ இதோ - Aishwarya rajesh farhana Making video out now | Galatta

தென்னிந்திய நடிகைகளில் மிக முக்கியமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வித்யாசமான கதைகளத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில மாதங்களாக அட்டகாசமான பல படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். அதன்படி தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.  அதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தீயவர்கள் குலைகள் நடுங்க, மோகன் தாஸ், தீரா காதல், டியர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வித்யாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. பிரபல திரைப்படமான ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்ஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இஸ்லாமிய பெண் வாழ்கை கதையை கருவாக கொண்டு உருவான ஃபர்ஹானா திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இஸ்லாமிய மதத்தினரை தவறாக காட்டுகிறார்கள் என்ற சர்ச்சையும் கிளம்பியது. நிறைய தடைகளை கடந்து வரும் மே 12ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   

இந்நிலையில் படத்தில் பெரும்பாலும் காட்சிகள் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் அந்த காட்சியின் படமாக்கம் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து சிறப்பு வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. மெட்ரோவில் ஏன் படப்பிடிப்பு நடத்தினோம் என்பதற்கான காரணத்துடன் வெளியான இந்த வீடியோ படத்திற்கு கூடுதல் எதிர்பார்பை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“நான் மலேசியாவில் இருக்கேன்.. இங்க அவங்க உடைஞ்சு போயிட்டாங்க..” விபத்தின் போது மனைவியின் மனநிலை குறித்து விஜய் ஆண்டனி.. – முழு வீடியோ இதோ..
சினிமா

“நான் மலேசியாவில் இருக்கேன்.. இங்க அவங்க உடைஞ்சு போயிட்டாங்க..” விபத்தின் போது மனைவியின் மனநிலை குறித்து விஜய் ஆண்டனி.. – முழு வீடியோ இதோ..

அட்டகாசமான பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்த தங்கர் பச்சான்.. ஆச்சர்யத்தில் உறைந்த லோகேஷ் கனகராஜ்.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

அட்டகாசமான பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்த தங்கர் பச்சான்.. ஆச்சர்யத்தில் உறைந்த லோகேஷ் கனகராஜ்.. - வைரலாகும் வீடியோ இதோ..

வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் வேட்டை.. உற்சாகத்தில் ரசிகர்கள் - முதல் பாகத்தை முந்தியதா?.. விவரம் இதோ..
சினிமா

வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் வேட்டை.. உற்சாகத்தில் ரசிகர்கள் - முதல் பாகத்தை முந்தியதா?.. விவரம் இதோ..