'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

அஜித் குமாரின் ஐரோப்பிய பைக் ரைடிங் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி,ajithkumar started his next bike ride in europe germany denmark norway | Galatta

தென்னிந்தியாவின் ஈடு இணையற்ற மாஸ் ஹீரோவாக திகழும் நடிகர் அஜித்குமார் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தனது அடுத்த படமான விடாமுயற்சி திரைப்படத்திற்கு முன்பாக நடிகர் அஜித்குமார் தனது ஐரோப்பிய பைக் ரைடிங்கை தொடங்கியதாக புகைப்படங்களை நடிகை ஷாலினி வெளியிட்டுள்ளார். பல கோடி சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனது திரைப் பயணத்தில் 62 வது திரைப்படமாக அஜித் குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாகவும் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க இருக்கிறார். கடந்த ஜூலை இரண்டாவது வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படத்தின் ஸ்கிரிப்ட் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் மகிழ் திருமேணி அவர்கள் அதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக “பரஸ்பர மரியாதைக்கான பயணம்” என்ற பெயரில் உலக பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கிய அஜித்குமார் அதன் முதல் பகுதியாக நேதாளம் பகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த மே 8ஆம் தேதியோடு இந்த சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பரில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது “ஏகே மோட்டா ரைடு” என்ற புதிய மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தது. 

சமீபத்தில் நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்குமார் அவர்கள் தற்சமயம் ஐரோப்பாவில் இருக்கிறார். மேலும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு முன்பாக தற்போது தனது ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்தையும் தொடங்கி இருக்கிறார்.  ஐரோப்பாவின் ஜெர்மனி , டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய பகுதிகளுக்கு அஜித் குமார் இந்த சுற்றுப்பயணத்தில் செல்ல இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து நடிகையும் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஜெர்மனி… டென்மார்க்… நார்வே… WAY TO GO…" எனக் குறிப்பிட்டு அஜித்குமாரின் புத்தம் புதிய பைக் ரைடிங் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

சினிமா

"கனவு பலித்த தருணம்!"- வெளிநாடு புறப்படும் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படக்குழு... மஹிமா நம்பியார் கொடுத்த மாஸ் ஷூட்டிங் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ்
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் "ஜெயிலர் SHOWCASE!"- ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மிரட்டலான அறிவிப்பு இதோ!

சினிமா

"தனுஷ் அப்போவே ப்ரொடியூசர் ஃபிரண்ட்லி!"- திருடா திருடி படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சுப்பிரமணியம் சிவா! வைரல் வீடியோ