புது மாப்பிள்ளையாக காதலியை கரம் பிடிக்கும் கவின்... மணமகள் யார்? திருமணம் எப்போது?- அசத்தலான தகவல்கள் இதோ!

புது மாப்பிள்ளையாக காதலியை கரம் பிடிக்கும் நடிகர் கவின்,dada actor kavin gets married with his girl friend in august  | Galatta

சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டாடா திரைப்படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த நடிகர் கவின் விரைவில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசன் 2 என்ற சீரியலில் நடிகராக களம் இறங்கிய நடிகர் கவின் பின்னர் சரவணன் மீனாட்சி மெகா தொடரில் வேட்டையன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகப் பிரபலமடைந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த சத்ரியன் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்த கவின், விஜய் தொலைக்காட்சியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் சின்னத்திரை ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து கவினை மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர ஆரம்பித்தது.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் முதல் முறை கதாநாயகனாக களம் இறங்கிய நடிகர் கவின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹாரர் திரில்லர் திரைப்படமாக நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த லிஃப்ட் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். ரசிகர்களிடையே லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து வெப் சீரீஸில் களமிறங்கிய கவின், கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளிவந்த ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த வரிசையில் கடைசியாக கவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டாடா. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பக்கா ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற டாடா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் ஒரு புதிய ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து வரும் கவின் தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி எனும் புதிய படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை நடிகர் கவின் கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நீண்ட காலமாக ரகசியமாக இருந்த இவர்களது காதல் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாண மேடை ஏறுகிறது.  மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின் விரைவில் புது மாப்பிள்ளையாக இருப்பதால் முன்னணி பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் அவருக்கு தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

சினிமா

"இளம்கன்றுஸ் எல்லோருக்கும் வாழ்த்துகள்!"- 20 ஆண்டுகளை கடந்த காக்க காக்க படம் பற்றி சூர்யாவின் ஸ்பெஷல் பதிவு! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"தனியா ரூம்ல இருக்க பயப்படுவாறு!"- இதுவரை வெளிவராத தனுஷின் ஆரம்ப கட்ட திரைப்பயண நினைவுகள்! சுப்பிரமணியம் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ