கடந்த 2007-ம் ஆண்டு தல அஜித் வைத்து கிரீடம் படத்தை இயக்கியவர் விஜய். அதைத்தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், சைவம் போன்ற சீரான படைப்புகளை தந்தார். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். 

Director Vijay And Aishwarya Blessed With Baby Boy

கடந்த வருடம் ஜூலை மாதம் இயக்குனர் விஜய்க்கும், மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு சென்னையில் இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக தகவல் வெளியானது. இயக்குனர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

Director Vijay And Aishwarya Blessed With Baby Boy

விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தலைவி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவத் நடிக்க, அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.