சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் ராஜு முருகன் கதை மற்றும் வசனத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா, வேல ராமமூர்த்தி போன்ற நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்தனர். உண்மையான காதலை மனதளவில் யாராலும் பிரிக்க முடியாது இதுதான் மெஹந்தி சர்க்கஸின் கதைச்சுருக்கம். 

Dhanush Praises Sean Roldans Mehandi Circus OST

ஷான் ரோல்டனின் அற்புதமான இசையில் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வியாழன் அன்று படத்தின் OSTயை வெளியிட்டார் இசையமைப்பாளர். ரசிகர்கள் தவிர்த்து திரைப்பிரபலங்களும் ஷானின் இசையை பாராட்டி பதிவு செய்து வந்தனர். 

Dhanush Praises Sean Roldans Mehandi Circus OST

இந்நிலையில் OST எனப்படும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஷான் ரோல்டனின் இசையில் தூய்மையும், உலகத்தரமும் இருக்கின்றது, அவரை நினைத்து பெருமைகொள்கிறேன் என்று பாராட்டி பதிவு செய்துள்ளார். தனுஷ் நடித்த பவர் பாண்டி, VIP 2 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஷான் ரோல்டன்.