விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இயல்பான நகைச்சுவையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு சஃபா ரியாஸ் என பெயரிட்டுள்ளார்.

Vijay Tv Nishas Daughter Reacts For Ajith Song

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான மாரி 2 திரைப்படத்தில் காமெடி ரோலில் நடித்திருந்தார். தனுஷ் மற்றும் ரோபோ ஷங்கருடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பியது. கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார் நிஷா. 

Vijay Tv Nishas Daughter Reacts For Ajith Song

இந்நிலையில் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் , தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலை அவர் பாட, குழந்தை கியூட்டாக ரியாக்ஷன் தருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அப்பதிவில் என் பாட்டுக்கு என் மகள் தாளம் போடுகிறாள். உங்கள் ஆசிர்வாதம் அவளுக்கு வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

En padalukku en magal safa Thalam. Kandipa avalukku unga blessing venum.

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on