தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனரான சுதா கோங்கரா தனது இறுதி சுற்றுகள் திரைப்படத்திற்கு பிறகு இயக்கம் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரும் பாராட்டுகளையும் பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. 8 FILMFARE விருதுகளை வென்ற சூரரைப் போற்று திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பு மற்றும் சிறந்த திரைக்கதை என ஐந்து தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கும் புதிய திரைப்படத்தை கே ஜி எஃப் மற்றும் காந்தாரா படங்களின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக தற்சமயம் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா தனது முதல் காரை தற்போது வாங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார். AUDI உயர்ரக சொகுசு கார் வாங்கி இருக்கும் இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் சூர்யா, இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் 2D எண்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் சுதா கொங்கராவின் பதிவு இதோ…
 

Njoying going green with my first car ever with my favourite people!❤️ #ManiSir @Suriya_offl @gvprakash @rajsekarpandian pic.twitter.com/D4NLoQFALj

— Sudha Kongara (@Sudha_Kongara) December 19, 2022