அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிடும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். முன்னதாக வாரிசு திரைப்படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இதனிடையே வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது பாடலாக முன்னணி பாடகி KS.சித்ரா பாடியுள்ள Soul Of Varisu பாடல் நாளை டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். “இது உனக்காக அம்மா” என குறிப்பிடப்பட்டு தளபதி விஜயின் அசத்தலான போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டர் இதோ…
 

#SoulOfVarisu - #VarisuThirdSingle is releasing Tomorrow at 5 PM 😍

🎙️ @KSChithra mam
🎵 @MusicThaman
🖋️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/VPDXO5uD4P

— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022