தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் மக்களின் மனம் கவர்ந்த ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்ற நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக தளபதி விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிடும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னதாக வாரிசு படத்தின் முதல் பாடலாக வெளிவந்த ரஞ்சிதமே பாடல் வைரல் ஹிட்டடிக்க தொடர்ந்து வெளிவந்த தீ தளபதி பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனிடையே வாரிசு படத்தின் 3வது பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், வருகிற டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் அந்த பாடலைப் பாட 3வது பாடல் வெளியாகும் என தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.