உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரம்மாண்டமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் மக்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அட்டகாசமான திரைப்படமாக வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது. அந்த வகையில் அவதார் படத்தின் இரண்டாவது பாகமாக தயாராகியுள்ள அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் தற்போது வெளியான நிலையில், தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் 3ம் பாகம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து (அவதார 2) அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் பிரம்மிப்பின் உச்சமாக 3டி தொழில்நுட்பத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை போன்று வசூலில் பல சாதனைகள் படைத்து வருகிறது.

ரிலீஸான வெறும் மூன்றே நாட்களில் உலகம் முழுக்க 3500 கோடி ரூபாய்க்கு மேல் அவதார் டி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வசூலித்துள்ளது. மேலும் இந்திய பாக்ஸ் ஆஃபிலும் அதிரடி காட்டி வரும் அவதார் திரைப்படம் மூன்று நாட்களில் 160 கோடி ரூபாய் தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பல வசூல் சாதனைகளை அவதார் 2 படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.