சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஆர் பிரபாகரன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவான இது கதிர்வேலன் காதல் படத்தினை இயக்கியிருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தினை இயக்கினார் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.ரசிகர்கள் மத்தியில் நல்ல இயக்குனர் என்ற பெயரை தனது படங்கள் மூலம் பெற்றார் பிரபாகரன்.

தனது முதல் பட நாயகன் சசிகுமாருடன் மீண்டும் இணைந்துள்ள பிரபாகரன் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தினை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இவரது தாயார் மறைந்துள்ளார் என்ற துக்க செய்தி தற்போது வெளியாகியுள்ளது.66 வயதான இவரது தாயார் ராஜலக்ஷ்மி உடல்நலக்குறைவால் மதுரையில் காலமாகியுள்ளார்.பிரபாகரன் மற்றும் குடும்பத்தினருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை ரசிகர்களும் பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.