தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக தயாராகி வருகிறது  தலைவி திரைப்படம் நடிகை கங்கனா ரனாவத் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நடிகர் அரவிந்த்சாமி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் முன்னாள் அமைச்சர் R.M.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடிக்க  நடிகை பூர்ணா, சசிகலா கதாபாத்திரத்திலும் நடிகை மதுபாலா ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். 

வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் தலைவி திரைப்படத்தை விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ்,தெலுங்கு , இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகும் இந்நிலையில் தலைவி படத்தின் புதிய பாடலின் டீசர் வீடியோ வெளியானது. உந்தன் கண்களில் என்னடியோ என்னும் அழகான பாடலின் புதிய டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரம்மியமான இந்த பாடலின் டீசர் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.