தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் திரு.ராதாமோகன் அவர்களின் இயக்கத்தில் நேரடியாக ZEE5 OTTதளத்தில்  உருவாகும் திரை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் அழகிய தீயே, மொழி, அபியும், நானும் பயணம் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன் அவர்கள். இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கவுள்ள ஒரு திரைப்படம் நேரடியாக  ZEE5-ல் வெளியாகிறது. 

மலேசியா டு அம்னீசியா என  பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய,பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். நடிகர் எம்எஸ்.பாஸ்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அடுத்த இன்னும் சில வாரங்களில் ஜி5 தளத்தில்  இத்திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

ராதாமோகன் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட வயதினரை  மட்டுமே திருப்திபடுத்தும் விதமாக இல்லாமல் அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான  விதத்தில் கதைக்களம் ,திரைக்கதை, காட்சியமைப்பு என அத்தனையும்  சிறப்பாக அமைந்திருக்கும். இந்நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்த மலேசியா டு அம்னீஷியா திரைப்படமும் அதேபோல அனைவராலும்  ரசிக்கும்படி இருக்கும் என்பதால்  இதன் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது.