'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’.! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..

தளபதியை இயக்கும் வேங்கட் பிரபு வைரல் வீடியோ இதோ - thalapathy vijay and Venkat prabhu team up for thalapathy 68 | Galatta

இந்திய சினிமாவே எதிர்பார்த்து இருக்கும் திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம்  லியோ. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் படம் என்பதாலும் உலகநாயகன் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும் லியோ திரைப்படத்திற்கு தனி எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பக்கா ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக லியோ உருவாகி வரும் அதே நேரத்தில் நடிகர் விஜயின் ‘தளபதி 68’ திரைப்படம் யார் இயக்கவுள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து திரையுலகில் தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் அட்லீ, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மற்றும் வெங்கட் பிரபு என்று பட்டியலில் உள்ளனர் என்று அரசல் புரசலாக தகவல் வெளியானது.

இயக்குனர் அட்லி பாலிவுட்டில் ஷாருக் கான் கூட்டணியில் ஜவான் எடுத்து வருவதால் நிச்சயம் அட்லீ யாக இருக்க முடியாது என்று ரசிகர்கள் யூகிக்க நடிகரும் தயாரிப்பாளருமான ஜீவா விஜய் படம் குறித்த தகவலையும் வெளியிட்டார். இதையடுத்து விஜய் சூப்பர் குத்ப் பிலிம்ஸ் தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் கூட்டணியில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தளபதி 68 படம் குறித்த அப்டேட்டினை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விஜயின் ‘புதிய கீதை’ திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டு கழித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனாராக வலம் வரும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் இப்படம் உருவாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெங்கட் பிரபு ரசிகர்கள் யுவன் ரசிகர்கள் என்று இணையதளமே கோலாகல கொண்டாடட்டமாக தற்போது மாறியுள்ளது. தற்போது தளபதி 68 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

 

Next… pic.twitter.com/iw1M5Dy7x9

— Vijay (@actorvijay) May 21, 2023

பழம்பெரும் நடிகை வசந்தா உடல்நல குறைவினால் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..
சினிமா

பழம்பெரும் நடிகை வசந்தா உடல்நல குறைவினால் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..

உருகும் வடிவேலுவின் குரல்.. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘மாமன்னன்’ முதல் பாடல்.. – அட்டகாசமான காட்சிகளுடன் வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

உருகும் வடிவேலுவின் குரல்.. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘மாமன்னன்’ முதல் பாடல்.. – அட்டகாசமான காட்சிகளுடன் வைரலாகும் பாடல் இதோ..

பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பிக்பாஸ் ரைசாவுக்கு என்ன ஆச்சு..? கண்ணீருடன் வெளியான புகைப்படங்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..