ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்.. காமெடியில் கலக்கும் யோகிபாபு.. - வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ரசிகர்களால் வைரல்..

சித்தார்த் நடித்த டக்கர் படத்தில் டிரைலர் இதோ - Actor siddharth takkar movie trailer out now | Galatta

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ல் வெளியான திரைப்படம் ‘பாய்ஸ்’  இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த். பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடபட்டு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நச்சத்திரமாக வளர்ந்தார். முன்னதாக இவர் நடிப்பில் தெலுங்கு திரையுலகில் ‘மகாசமுத்திரம்’ திரைப்படம் வெளியானது. தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய படங்கள் 2019 ல் வெளியானது.  இதனிடையே சில காலம் திரைப்படங்களில் நடிப்பதில் சற்று ஒதுங்கி இருந்த நடிகர் சித்தார்த். தற்போது தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மாதவன் ஆகியோருடன் இணைந்து நடிகர் சித்தார்த் ‘டெஸ்ட்’ என்ற படத்திலும் மற்றும் ‘சித்தா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  

இதனிடையே நடிகர் சித்தார்த் ‘கப்பல்’ திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் டக்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார். நீண்ட காலமாக வெளியீட்டிற்கு காத்திருந்த டக்கர் திரைப்படம் ஜூன் 9 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவான டக்கர் திரைப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யா கணேஷ், யோகி பாபு, அபிமன்யூ சிங், முனீஸ்காந்த், ஆர்ஜே விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் பாடல்கள் இப்படத்தின் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. முன்னதாக நடிகர் சித்தார்த் அவர்களின் பிறந்தாநாளை முன்னிட்டு டக்கர் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இளைஞர்களை கவரும் விதத்தில் ஆக்ஷன் காதல் கதையாக உருவான டக்கர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் படக்குழு டக்கர் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக வேண்டும் என்று படத்தின் நாயகன் இருக்கும்போது எதிர்பாராத வகையில் பணக்கார கதாநாயகியுடனான சந்திப்பு கிடைக்க பின் நடக்கும் கதையாக டக்கர் திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழில் ரசிகர்களின் அபிமான ஹீரோவாகவும் இருந்த சித்தார்த் திரைத்துறையில் இடைவெளி விட்டு தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் மூலம் நடிகர் சித்தார்த் மீண்டும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

அடுத்த Pan India ஹிட்டிற்கு திட்டம் போட்ட ‘கே.ஜி.எஃப்’ இயக்குனர்.. – ஜூனியர் NTR கூட்டணியில் உருவாகும் புது பட அப்டேட் இதோ..
சினிமா

அடுத்த Pan India ஹிட்டிற்கு திட்டம் போட்ட ‘கே.ஜி.எஃப்’ இயக்குனர்.. – ஜூனியர் NTR கூட்டணியில் உருவாகும் புது பட அப்டேட் இதோ..

வித்யாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்.. ‘காஸ்டியூம் அடிமைகள்’ என்று பதிவிட்ட பிரபல இயக்குனர்.. - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வித்யாசமான ஆடையில் ஐஸ்வர்யா ராய்.. ‘காஸ்டியூம் அடிமைகள்’ என்று பதிவிட்ட பிரபல இயக்குனர்.. - வைரலாகும் பதிவு இதோ..

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகை.. அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.! – உருக்கமான இரங்கல் செய்தி இதோ.
சினிமா

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகை.. அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.! – உருக்கமான இரங்கல் செய்தி இதோ.