ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..

ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன் விவரம் இதோ – Sivakarthikeyan takes break from twitter | Galatta

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அட்டகாசமான நடிப்புடன் குழந்தைகளையும் குடும்பத்தார்களையும் கவரும் விதமான திரைப்படங்களில் நடித்து சமீபத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் முன்னதாக வெளியான டாக்டர்,டான் ஆகிய படங்கள் வசூல் அடிப்படையிலும் விமர்சன அடிப்படையிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இவர் ‘மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக உருவாகி கிராபிக்ஸ் காட்சிகளுக்காக களம் இறங்கியுள்ள திரைப்படம் ‘அயலான்’.  ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ளது.

இந்த ஆண்டு தொடர்ந்து பேக் டூ பேக் முக்கிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் இனி இந்த பக்கம் அவரது குழு கையாளவுள்ளதாகவும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே.. நான் சிறிது நாள் ட்விட்டரில் இருந்து விலகுகிறேன்.. உங்களை பார்த்து கொள்ளுங்கள்.. நான் விரைவில் வருவேன்.. அனைத்து அப்டேட்டுகளும் எனது குழுவினர் உங்களுக்கு தெரிவிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

My dear brothers and sisters,
I am taking a break from twitter for a while.
Take care, and i will be back soon 👍😊

P.S: All updates on the films will be shared here by my team. pic.twitter.com/Nf4fdqXRTy

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 30, 2023

இதையடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விரைவில் ட்விட்டர் பக்கம் வருமாறும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். பொதுவாகவே சிவகார்த்திகேயன் அதிகம் சமூக வலை தளங்களில் அதிகம் இயங்கி வருபவர். அதன்படி அவரது திரைப்படங்கள் குறித்து பல தகவல்களையும் சக நடிகர்களின் படங்களை வாழ்த்தி பதிவிடுவது வழக்கம். இதன்மூலம் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் பதிவுகளை அவ்வப்போது வைரலாக்கி வருவார்கள். இந்நிலையில் தற்போது சிவ்கார்த்திகேயன் ட்விட்டரில் இருந்து விலகுவது ரசிகர்களை வேதனைக்குல்லாக்கியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் ‘SK21’ என்றழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். ராணுவ களத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சூரி விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பீன் நடிக்கவிருக்கும் ‘கொட்டுக்காளி’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தின் தங்க சுரங்கம் உருவான விதம் குறித்து தோட்டா தரணி  - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் தங்க சுரங்கம் உருவான விதம் குறித்து தோட்டா தரணி - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

பிச்சைக்காரன் 2 புதிய ரிலீஸ் தேதியுடன் சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பிச்சைக்காரன் 2 புதிய ரிலீஸ் தேதியுடன் சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி – உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

“அந்த கண்ணாடி Shot இப்படிதான் எடுத்தோம்” உண்மையை உடைத்த தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“அந்த கண்ணாடி Shot இப்படிதான் எடுத்தோம்” உண்மையை உடைத்த தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..