தளபதி விஜய் பாணியில் திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த பவன் கல்யாண் – ஒரு மணி நேரத்தில் இத்தனை ஃபாலோவர்ஸா..! விவரம் உள்ளே..

தளபதி விஜய் போல் இன்ஸ்டாகிராமில் திடீர் கணக்கை தொடங்கிய பவன் கல்யாண் - Power star Pawan kalyan makes his instagram debut | Galatta

தென்னிந்திய திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். படத்திற்கு படம் வசூல் சாதனையை உருவாக்கி அவர் படங்கள் மூலமாக அதை முறியடிக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாக இருந்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப் படுத்தி பல சூப்பர் ஹிட் கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து ‘லியோ’ திரைபடத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி வரும் லியோ திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தளபதி விஜய் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளம் பக்கம் புதிய கணக்கை தொடங்கி அதில் லியோ படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்தார்.

இந்த நிகழ்வு இந்திய அளவு மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. காரணம் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி சில மணி நேரத்திலே 50 லட்சம்  ஃபாலோவர்கள் விஜய் கணக்கை பின் தொடர்ந்தனர். மேலும் உலகத்தில் அதி விரைவில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ்  பெற்ற பிரபலங்களில் விஜய் முதல் ஐந்து இடங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த நிகழ்வு விஜய் ரசிகர்களால் மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்டது. தற்போது இவர் இன்ஸ்டா கணக்கில் 8.2 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி விஜய் பாணியில் திடீரென இன்ஸ்டாகிராம் உலகத்தில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.  எக்கச்சக்க ரசிகர்களை கொண்டு பவர் ஸ்டாராக திரையுலகில் வலம் வரும் பவன் கல்யான் திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் துறையிலும் பிரபலமானவர். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த நாயகனாக இருந்து வருகிறார். மேலும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பவன் கல்யான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் ‘உஸ்தத் பகத் சிங்’, ‘ஹர ஹர வீர மல்லு’, ‘ஒஜி’ மற்றும் இயக்குனர் சமுத்திரகனி இயக்கி வரும் ‘புரோ’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு உள்ளது.

சமீப காலமாக ட்விட்டர் கணக்கில் ஆக்டிவ் ஆக இருந்த பவன் கல்யான் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் உடனடியாக இன்ஸ்டாகிராமில் பவன் கல்யாணை பின் தொடர்ந்துள்ளனர். அதன்படி ஒரு மணி நேரத்திலே சுமார் 25 லட்சம் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து ரசிகர்கள் பவன் கல்யான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

“அதிகார வர்க்கத்தை தோலுரித்திருக்கிறார்கள்..!” அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படக்குழுவினரை பாராட்டிய விசிக தலைவர் தொல் திருமாவளவன்..
சினிமா

“அதிகார வர்க்கத்தை தோலுரித்திருக்கிறார்கள்..!” அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படக்குழுவினரை பாராட்டிய விசிக தலைவர் தொல் திருமாவளவன்..

‘பிச்சைக்காரன் 2’ வெற்றிக்கு பின் ‘கொலை’ படத்தில் முமும்முரம் காட்டும் விஜய் ஆண்டனி - கவனம் ஈர்க்கும் 1st Single இதோ..
சினிமா

‘பிச்சைக்காரன் 2’ வெற்றிக்கு பின் ‘கொலை’ படத்தில் முமும்முரம் காட்டும் விஜய் ஆண்டனி - கவனம் ஈர்க்கும் 1st Single இதோ..

“ஒரே படத்தில் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது” பா ரஞ்சித் பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் பதில்..! - ‘மாமன்னன்’ குறித்து வைரலாகும் காரசார பேச்சு..
சினிமா

“ஒரே படத்தில் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியாது” பா ரஞ்சித் பதிவிற்கு உதயநிதி ஸ்டாலின் பதில்..! - ‘மாமன்னன்’ குறித்து வைரலாகும் காரசார பேச்சு..