மூன்றே ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

விவாகரத்து பெற்ற பிரபல நடிகை வைரல் பதிவு உள்ளே -  Actress niharika announces divorce from chaitanya | Galatta

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நட்சத்திரமாகவும் தெலுங்கு திரையுலகில் முக்கிய புள்ளியாக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது சொந்த பந்தங்கள் பெரும்பாலும் திரையுலகை சார்ந்தவர்கள். தெலுங்கு திரையுலகம் மற்றும் அரசியல் துறையிலும் சிரஞ்சீவியின் குடும்பத்தாரின் பங்கு ஒரு வகையில் இருந்து வரும்.  அதன்படி அவரது தம்பி நாக பாபு. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராகவர் பல தசாப்தங்களாக  50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனி ஒரு அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் தமிழில் ‘விழித்திரு’, ‘இந்திரஜித்’, ‘வேட்டை’,   போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.

இவரது மகள் நிகாரிகா, நடிகையான இவர் கடந்த 2018 ம் ஆண்டு இயக்குனர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் உருவான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தெலுங்கு திரையுலகில் கடந்த 2016 ல் வெளியான ‘ஒக்க மனசு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதன்பின் தொடர்ந்து ‘ஹாப்பி வெட்டிங்’, ‘சூர்யா காந்தம்’, ‘சே ரா நரசிம்ம ரெட்டி’ போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ம் ஆண்டு குண்டூர் ஐஜி மகன் சைதன்யாவுடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது இந்த திருமண விழாவில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜுன் உட்பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  

 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகை நிகாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது திருமண புகைப்படங்களை திடீரென நீக்கினார். இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. இத்து குறித்து எந்தவொரு விளக்கமும் நிஹாரிகா தரப்பிலும் சைதன்யா தரப்பிலும் வெளியாகாமல் இருந்தது. அதையடுத்து சமீபத்தில் நடிகை நிஹாரிகா ஹைதராபாத் குக்கட்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய அளவு பேசு பொருளானது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் நடிகை நிஹாரிகா சைதன்யா பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “சைதன்யாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஆதரவளித்து உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி. இதனை தனிப்பட்ட விஷயமாக விட்டுவிட வேண்டுகிறேன்.." என்று ரசிகர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் நிஹாரிகா பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் தங்கள் ஆதரவினை நடிகை நிஹாரிகாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

A post shared by Niharika Konidela (@niharikakonidela)

நெருப்பா இருக்கே.! ‘கேஜிஎஃப்’ இயக்குனரின் அடுத்த பக்கா ஆக்ஷன் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸை உறுதி செய்யும் பிரபாஸின் ‘சலார்’ பட டீசர்..
சினிமா

நெருப்பா இருக்கே.! ‘கேஜிஎஃப்’ இயக்குனரின் அடுத்த பக்கா ஆக்ஷன் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸை உறுதி செய்யும் பிரபாஸின் ‘சலார்’ பட டீசர்..

கடுமையான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கௌதம் மேனன்.. லோகேஷ் கொடுத்த அட்வைஸ்..! – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive Interview உள்ளே..
சினிமா

கடுமையான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கௌதம் மேனன்.. லோகேஷ் கொடுத்த அட்வைஸ்..! – சுவாரஸ்யமான தகவல்களுடன் Exclusive Interview உள்ளே..

தளபதி விஜய் பாணியில் திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த பவன் கல்யாண் – ஒரு மணி நேரத்தில் இத்தனை ஃபாலோவர்ஸா..! விவரம் உள்ளே..
சினிமா

தளபதி விஜய் பாணியில் திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த பவன் கல்யாண் – ஒரு மணி நேரத்தில் இத்தனை ஃபாலோவர்ஸா..! விவரம் உள்ளே..