அஜித் குமார் - மகிழ் திருமேனி அதிரடி காம்போவின் விடாமுயற்சி பட ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! வைரல் வீடியோ

அஜித் குமாரின் விடாமுயற்சி பட ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தனஞ்ஜெயன்,ajith kumar and magizh thirumeni in vidamuyarchi movie shoot update | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க கூடிய இயக்குனர் மகள் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் நமது கலாட்டா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இயக்குனர் H.வினோத் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என தொடர்ச்சியாக மூன்று படங்கள் நடித்த அஜித் குமார் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைக்கோர்த்திருக்கிறார். தனக்கென தனி ஸ்டைலில் பக்கா ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் மகிழ் திருமேனியுடன் அஜித் குமார் இணைந்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் திரு.தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “விடாமுயற்சி திரைப்படம் குறித்து ஏன் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை ?” என அவரிடம் கேட்டபோது, “மொத்த அப்டேட் என்ன என்று கேட்டீர்கள் என்றால் கண்டிப்பாக ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது... இதை மட்டும் நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். மற்ற எல்லாமே கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அந்தக் கதையில் தான் அவர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு சொல்கிறார்கள் என்றால், இந்த விஷயத்தில் அஜித் சார் அவர்களை கண்டிப்பாக நாம் பாராட்டியாக வேண்டும். அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் நீங்கள் கதையில் திருப்தியாக வேண்டும் அதுவரைக்கும் நாம் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம். நான் காத்திருக்க தயாராக இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய விஷயம். அவ்வளவு பெரிய நடிகர் வந்து, "யோவ் வேற படம் ஆரம்பித்து போய்க் கொண்டே இருக்கலாம்.. இப்போது பாட்டு அல்லது சண்டைக் காட்சிகளை படமாக்கு.. நடுவில் கதையை சரியாக்கு.." என சொல்லலாம். ஆனால் அப்படியெல்லாம் சொல்லாமல், அவர் மகிழ் திருமேனியிடம் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், “நூறு சதவீதம் கதை மீது உங்களுக்கு திருப்தியாக வேண்டும் அதாவது எல்லா காட்சிகளும் திருப்தியாகி பக்கவாக நீங்கள் ரெடியாகிவிட்டால்.. அதாவது டயலாக் வெர்சனோடு ஒரு பவுண்ட் ஸ்கிரிப்ட் நீங்கள் தயாராக்கி விட்டால், அன்றே நாம் ஷூட்டிங் போகலாம். அதுவரையிலும் நீங்கள் திருப்தியாக செய்யுங்கள்” என அவர் அவகாசம் கொடுத்திருக்கிறார். மகிழ் திருமேனி என்ன சொல்லி இருக்கிறார் என்றால், “இந்த ஜூலை 15ஆம் தேதியோடு எல்லா பணிகளும் முடிந்து விடும். அதன் பிறகு ப்ரீ-ப்ரோடுக்ஷனுக்காண பணிகளை பார்த்துவிட்டு, ஆகஸ்டில் படப்பிடிப்பு செய்யலாம் என திட்டமிட்டு இருக்கிறேன்.” என சொல்லி இருப்பதாக லைகா தரப்பில் இருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன. லைகா என்ன சொல்கிறார்கள் என்றால், “சார் நாங்கள் தயாராக இருக்கிறோம் அஜித் சார் சரி என்று சொன்னால் போதும், அஜித் சார் எப்போது சரி என்று சொல்வார் மகிழ் திருமேனி சரி என்று சொன்ன பிறகு.. எனவே இவர்கள் இருவரும் சொல்லட்டும். சொன்ன உடனே படப்பிடிப்பிற்கு சென்று விடுவோம்.” என்று தான் அவர்கள் சொல்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் தெலுங்கில் நாயகுடு... சர்ப்ரைஸாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சினிமா

தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் தெலுங்கில் நாயகுடு... சர்ப்ரைஸாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!

ஜெயம் ரவி - ARரஹ்மான் - வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் கூட்டணியில் புதிய பிரம்மாண்ட படம்! அட்டகாசமான டைட்டில் & இதர விவரங்கள் உள்ளே
சினிமா

ஜெயம் ரவி - ARரஹ்மான் - வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் கூட்டணியில் புதிய பிரம்மாண்ட படம்! அட்டகாசமான டைட்டில் & இதர விவரங்கள் உள்ளே