சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம ஸ்டைலில் வந்த ஜெயிலர் பட முதல் பாடல்... ட்ரெண்டாகும் காவாலா லிரிக் வீடியோ இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் காவாலா வெளியீடு,rajinikanth in jailer movie first single kaavaalaa out now | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் தற்போது வெளியானது. என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கபைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்து வரவேற்பை பெற தவறிய நிலையில், அடுத்தடுத்து அவரது நடிப்பதை தயாராகும் வரைபடங்கள் ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன அந்த வகையில், தற்சமயம் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்க இருக்கிறார். 

அடுத்ததாக முதல் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் தற்போது வெளியானது. இசையமைப்பாளர் அனிருத்தின் வழக்கமான துள்ளல் இசையில் வெளிவந்திருக்கும் இந்த காவாலா பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார். அனிருத் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து பாடி இருக்கும் இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார். நடிகை தமன்னாவின் துள்ளலான நடனமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் செம்ம ஸ்டைலும் கலந்து வெளிவந்திருக்கும் இந்த காவாலா பாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட காவாலா பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
 

'மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்!'- ஜெயம் ரவியுடன் ஜீனி படத்தில் இணைந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த கல்யாணி பிரியதர்ஷன்! விவரம் உள்ளே
சினிமா

'மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்!'- ஜெயம் ரவியுடன் ஜீனி படத்தில் இணைந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த கல்யாணி பிரியதர்ஷன்! விவரம் உள்ளே

தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் தெலுங்கில் நாயகுடு... சர்ப்ரைஸாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சினிமா

தமிழில் வெற்றி பெற்ற மாமன்னன் தெலுங்கில் நாயகுடு... சர்ப்ரைஸாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!