பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி.! - நடுவராக முன்னணி இசையமைப்பாளர்.. விவரம் உள்ளே..

விரைவில் தொடங்கவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 அட்டகாசமான அறிவிப்பு உள்ளே - Super singer junior launch on july 8 | Galatta

தமிழ் ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து அவர்கள் மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சியாக இருந்து வரும் நிகழ்ச்சி விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர். குழந்தைகளுக்கான போட்டி, பெரியவர்களுக்கான போட்டி என இரண்டு பிரிவுகளில் போட்டி அமைத்து திறமையான பாடகர்களை வெகுஜன மக்களுக்கு பக்கா என்டர்டெயின் உடன் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது. மேலும் திறமைக்கு தகுந்த தளமாக விளங்கி இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன் அவர்களுக்கான அந்தஸ்தையும் உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சியின் வழியாக பல பாடகர்கள் திரைத்துறையில் பாடகர்களாக களமிறங்கியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் சூப்பர் சிங்கர் 9 சீனியர்களுக்கான நிகழ்ச்சி நிறைவடைந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் அருனா சிவயா, பிரியா ஜெர்ஸன், ப்ரசன்னா ஆதிசேஷா, அபிஜித், பூஜா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அட்டகாசமான பாடி நடுவர்களின் பாராட்டுகளை பெற்று போட்டியாளர் அருணா சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார்.  இந்த நிகழ்வு ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வரவேற்பையும் பெற்றது. சீனியர்களுக்கான நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர்களுக்கான போட்டி 9வது சீசன் தொடங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்’ என்ற வாசகத்தை முன் வைத்து பல மாநிலங்களில் இருந்து வந்த 6 முதல் 15 வயது வரையிலான திறமையான குழந்தைகளை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொண்டு இந்த நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது.

வரும் ஜூலை மாதம் 8ம் தேதி முதல் விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 9’ நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தோறும் ஒளிப்பரபாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவராக சின்னக்குயில் சித்ரா, முன்னணி இசையமைப்பாளர் தமன் மற்றும் மக்களிசை கலைஞர் அந்தோணி தாசன் ஆகியோர் நடுவர்களாகவும் ம கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுப்பாளர்களாகவும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழி திரையுலகிலும் முன்னணி ஸ்டார்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தமன் இந்த சீசனில் நடுவராக இருப்பது இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மூன்றே ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சினிமா

மூன்றே ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

“ஆக சிறந்த கலைஞர்களில் ஒருவர்..” மாமன்னன் வடிவேலுவிற்கு புகழாரம் சூட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.!
சினிமா

“ஆக சிறந்த கலைஞர்களில் ஒருவர்..” மாமன்னன் வடிவேலுவிற்கு புகழாரம் சூட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.!

“என் வாழ்நாள் கனவில் ஒன்று நிறைவேறியது..” உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘2018’ பட இயக்குனர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“என் வாழ்நாள் கனவில் ஒன்று நிறைவேறியது..” உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘2018’ பட இயக்குனர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..