"உங்களுக்கெல்லாம் லேகியம் கதைதான்.." ரசிகர்கள் மீது கோபம் கொண்டு எடுத்த படம் இது தான்.. - சுவராஸ்யமான தகவலை பகிர்ந்த இயக்குனர் பாரதிராஜா..

பிடிக்காத படங்கள் குறித்து இயக்குனர் பாரதிராஜா சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ - Director Bharathraja about Kaadhal oviyam movie | Galatta

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் இமயம் பாரதி ராஜா. 70 களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றைய நவீன காலம் வரை வித்யாசமான கதைகளை கொண்டு எளிய மக்களின் உணர்வுகளை அடிப்படையாக கொண்டு பல வெற்றி படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சி காலத்திற்கு வித்திட்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாரதி ராஜா. சமீப காலமாக குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை, ராக்கி, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம், திருவின் குரல் போன்ற பல படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பிலும் தன்னை இந்த கால ரசிகர்களுக்காக புதுப்பித்து கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் 2020 ல் வெளியான ‘மீண்டும் மரியாதை’ இப்படத்தையடுத்து இயக்குனர் பாரதி ராஜா தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்கவுள்ளார். அதன்படி உலகளாவிய பிரபலமான இணைய தொடரான ‘மாடர்ன் லவ்’ தொடரின் சென்னை வெர்சனில் ஒரு எபிசோடை இயக்குனர் பாரதி ராஜா இயக்கவுள்ளார். இந்த தொடர் வரும் மே 19 ம் தேதி நேரடியாக பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனரும் நடிகருமான பாரதி ராஜா அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்ட்ஹூ கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் மாடர்ன் லவ் சென்னை தொடர் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் பாரதி ராஜா அவர்கள் இயக்கிய படங்களில் அவருக்கு மிக பிடித்த திரைப்படம் குறித்து கேட்கையில் அவர்,  

என் பையன் பொண்ணு ரெண்டு பேருல யாரை பிடிக்கும் னு கேட்டா‌. ரெண்டும் நான் பெத்த புள்ளைங்க.. நான் படைத்த எல்லாமே எனக்கு பிடிக்கும்.. அந்த ஒரு படத்தை தவிர..விருப்பமில்லாமல் நான் பண்ண படம் 'வாலிபமே வா'.. என்னோட முந்தையபடம் 'காதல் ஓவியம்' தோல்வியானது. அது ஒரு அற்புதமான படம். அதை ரசிகர்கள் தோல்வியடைய செய்துவிட்டார்கள்.  பிரமாதமான படம்.. அருமையான கலை அது.. அந்த படத்தை உணர்ந்து எடுத்தேன்..   அது போன கோவத்தில் உங்களுக்கு லேகியம் விக்குற கதை தான்டா சரியா வரும் னு பண்ண படம்தான் 'வாலிபமே வா'. ரசிகர்கள் மேல கோவிச்சுட்டு பண்ண படம் அது..   அந்த ஒரு படத்தை தவிர எனக்கு எல்லா படமும் பிடித்த படம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எல்லோரும் 'முதல் மரியாதை' படத்தை சொல்வார்கள். ஆனால் எனக்கு நெருக்கமாக இருப்பது 'அலைகள் ஓய்வதில்லை'.  அந்த படத்தில் ஒரு இளமை இருக்கும். முதலில் அந்த படத்தில் இஸ்லாமிய பெண்ணாக தான் கதை வைத்திருந்தேன். அந்த கதையை இப்போது செய்திருந்தால் மிகப்பெரிய பிரச்சனை வந்திருக்கும்.”  என்றார் இயக்குனர் பாரதி ராஜா.

மேலும் இயக்குனர் இமயம் பாரதி ராஜா அவர்கள் மாடர்ன் லவ் திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

90’s க்கு திரும்ப கொண்டு போன ஹிப் ஹாப் ஆதி.. அட்டகாசமான பாடலை வெளியிட்ட ‘வீரன்’ படக்குழு... – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

90’s க்கு திரும்ப கொண்டு போன ஹிப் ஹாப் ஆதி.. அட்டகாசமான பாடலை வெளியிட்ட ‘வீரன்’ படக்குழு... – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..

யுவன் இசையில் வெளியான ‘யாயும் ஞாயும்’.. Vibe செய்யும் ரசிகர்கள் - வைரலாகும் மாடர்ன் லவ் சென்னை தொடரின் பாடல் இதோ..
சினிமா

யுவன் இசையில் வெளியான ‘யாயும் ஞாயும்’.. Vibe செய்யும் ரசிகர்கள் - வைரலாகும் மாடர்ன் லவ் சென்னை தொடரின் பாடல் இதோ..

‘லியோ’ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜை கலாய்த்த தளபதி விஜய்.. – சாந்தனு பகிந்த கலகலப்பான தருணம்.. Exclusive interview இதோ..
சினிமா

‘லியோ’ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜை கலாய்த்த தளபதி விஜய்.. – சாந்தனு பகிந்த கலகலப்பான தருணம்.. Exclusive interview இதோ..