சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். ஆதித்ய வர்மா படம் நல்ல வசூலையும் ஈட்டியது. சிறந்த அறிமுக நாயகன் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றார் துருவ். 

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் இந்த ஆண்டின் துவக்கத்தில் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார் துருவ் விக்ரம். 

உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு ஆகிய தகவல்களை துருவ் விக்ரம் தெரிவிக்கவில்லை. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் செய்திகள் இணையத்தில் வலம் வந்தது.  

இந்நிலையில் சற்று முன்னர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணைய உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவருக்குமே இது மூன்றாவது படம் என்பதும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் தெரியவந்தது. 

துருவ் கைவசம் சியான் 60 திரைப்படம் உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். 

மாரி செல்வராஜ் தனுஷ் வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்துவிட்ட விமர்சித்திருந்தார் சந்தோஷ் நாராயணன். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhruv (@dhruv.vikram)