திருமணம் செய்ய மறுத்த காதலனை, காதலி உட்பட 4 சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தேனி மாவட்டம் மேல்மங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் சாலையின் ஓரமாக, கடந்த 21 ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. 

இதனையடுத்து, அந்த உடல் பிரேதப் பரிசோதனைக்கா அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாகத் தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், எரித்து கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீட்டைச் சேர்ந்த 29 வயதான ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவருடைய செல்போன் எண்ணிற்கு வந்த அனைத்து அழைப்புகளின் அடிப்படையில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதன் படி, தேனி மாவட்டம் வடுகபட்டியைச் சேர்ந்த 20 வயதான விஜயசாந்தி என்ற இளம் பெண்ணை அழைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். காரணம், அந்த பெண்ணின் நம்பரில் இருந்து கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ்க்கு அடிக்கடி போன் வந்திருக்கிறது. அத்துடன், அந்த நபருக்கு கடைசியா வந்த போன் நம்பரும், அந்த பெண்ணுடையது தான் என்பதையும் போலீசார் உறுதி செய்துகொண்டனர். அதன் அடிப்படையிலேயே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான விசாரணையில், “கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ் - விஜயசாந்தி இருவரும் காதலித்து வந்தது” தெரிய வந்தது.

அத்துடன், “இப்படி காதலர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலி விஜயசாந்தியை காதலன் ஆனந்தராஜ் கர்ப்பமாக்கியதாகவும்” கூறப்படுகிறது. 

ஆனால், “காதலியை விஜயசாந்தியை திருமணம் செய்யாமல், காதலன் ஆனந்தராஜ் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார்” என்றும், கூறப்படுகிறது. 

இதனால், கடும் ஆத்திரமடைந்த காதலி விஜயசாந்தி, தனது சகோதரி வித்யா, உறவினர்கள் பிரபாகரன், ஆசைப்பாண்டி ஆகியோர் உதவியுடன் வடுகபட்டிக்கு ஆனந்தராஜை நேரில் வரவழைத்து உள்ளார் காதலி விஜயசாந்தி. 

அதன் படி, சமாதானம் பேச வந்த காதலன் ஆனந்தராஜை, அங்கு வைத்தே காதலி விஜயசாந்தி, கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்விட்டு தப்பிச் சென்றது” விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, காதலனை கொலை செய்த காதலி விஜயசாந்தி, அவரது சகோதரி வித்யா, உறவினர்களான பிரபாகரன், ஆசைப்பாண்டி ஆகிய 4 பேரையும் ஜெயமங்கலம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து, அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் அவர்கள் 4 பேரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.