சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும் தளபதி ரசிகரின் டான்ஸ் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | January 28, 2021 16:06 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாய் கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் படைத்தது. கோடி ரூபாய் வசூல் செய்து இருந்த விஜய்யின் மாஸ்டர்.
இதனை MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு முன்பு விஜய் நடித்த, மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வார இறுதி நாட்களில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இதனால் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக வாத்தி வரவேற்ப்பை பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அவ்வளவு ஏன் இந்த பாடலுக்கு தான் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் நடனம் ஆடி இருந்தார். அதேபோல திரை அரங்கிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருந்தார்கள்.
இந்த பாடலின் வீடியோவை நேற்று வெளியிட்டனர் மாஸ்டர் படக்குழுவினர். இந்நிலையில் இந்த பாடலுக்கு அசத்தலாக நடனமாடி வீடியோ வெளியிட்டிருக்கிறார் தளபதி ரசிகர் ஒருவர். தளபதி விஜய் போலவே முகபாவனைகள் கொண்டு சிரித்த படி கூலாக கலக்கியுள்ளார் இந்த ரசிகர். இந்த டான்ஸ் வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.
தளபதி விஜய் போலவே அவரது ரசிகர்களும் நடனத்தில் பின்னி பெடலெடுக்கின்றனர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடியோ.
The best fan u can make 🔥🔥♥️@actorvijay 🥺💖pic.twitter.com/ODPFmVBtIU
— Gryffindor Robin🦁 (@itz_RobinJ) January 28, 2021
Official: Heroine revealed for Suriya 40 | Sun Pictures | Pandiraj
28/01/2021 04:21 PM
Sukran actress Anita Hassanandani's maternity photoshoot pics go viral!
28/01/2021 04:14 PM
Popular Singer gets married to her boyfriend - wedding pictures go viral!
28/01/2021 03:31 PM