சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகிறது.யாஷிகா ஆனந்த் கொரோனாவுக்கு பிறகு வந்த சில எபிசோடுகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

ரசிகர்களின் ஆதரவோடு 600 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பல சுவாரசிய திருப்புமுனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.கடந்த பல வாரங்களாக TRP-யில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தி வருகிறது.

விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் இருந்து நாயகி விளக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.தற்போது இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள தொடரின் நாயகி பிரியங்கா.இந்த தொடர் முடியும் வரை ரோஜாவாக தான் மட்டும்தான் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ப்ரியங்கா.இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)