தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அனுராக் கஷ்யப்,Anurag kashyap confirms his role in thalapathy vijay in leo movie | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் அவர்களை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரமாக முன்னணி இயக்குனரும் நடிகருமான அனுராக்ஷ்யப் இணைந்து இருப்பதாக தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறார். மக்களின் மனம் கவர்ந்த நாயகரான தளபதி விஜய் அடுத்ததாக தனது திரைபயணத்தின் 68-வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கைக்கோர்க்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில் இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது லியோ திரைப்படம் தான்.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த லியோ திரைப்படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து இருக்கிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட வெளியிடாக லியோ திரைப்படத்தை வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக லியோ திரைப்படத்தில் இவர் இருக்கிறார் அவர் இருக்கிறார் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் பாலிவுட்டில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் அனுராக் கஷ்யப் தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் லியோ படத்தில் அனுராக் கஷ்யப் இருப்பதாக ஸ்டேட்டஸ் பதிவிட, அதனை தனது ஸ்டேட்டஸில் பதிவிட்டு பிளடி ஸ்வீட் என அனுராக் கஷ்யப் குறிப்பிட்டு இருப்பதால் அவரை இதனை உறுதி செய்து இருப்பதாகவும் செய்திகள் பரவுகின்றன. அடுத்த சில தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுராக் கஷ்யப்பின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இதோ…

jayam ravi in jr32 genie movie starts with pooja ar rahman vels film

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் படப்பிடிப்பு நிறைவு... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழுவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் படப்பிடிப்பு நிறைவு... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழுவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

இறுதிக்கட்டத்தில் தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர்… படப்பிடிப்பை முடித்த முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட் இதோ
சினிமா

இறுதிக்கட்டத்தில் தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர்… படப்பிடிப்பை முடித்த முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட் இதோ

பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ
சினிமா

பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ