ஜெயம் ரவி - ARரஹ்மான் - வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் கூட்டணியில் புதிய பிரம்மாண்ட படம்! அட்டகாசமான டைட்டில் & இதர விவரங்கள் உள்ளே

ஜெயம் ரவியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ஜீனி பட அறிவிப்பு,Jayam ravi in jr32 genie movie starts with pooja ar rahman | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயம் ரவியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான JR32 திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில், நடிகர் நடிகைகள் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகின. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக தொடர்ச்சியாக அனைத்து வயதினரும் விரும்பும் வகையிலான திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் ஜெயம் ரவி கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மானாக கதையின் நாயகனாக மக்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக ஜெயம் ரவி நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.

அந்த வகையில் வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சைரன் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்க இருக்கும் JR32 திரைப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், அந்த அறிவிப்பு தற்போது வெளியானது. வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் JR32 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் கஸ்டடி பட நாயகி க்ரீத்தி ஷெட்டி மற்றும் வமிக்கா கேபி ஆகியோர் இணைந்து ஜெயம் ரவியுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு ஜீனி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உருவாகும் இந்த சீனி திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில் உமேஷ் J குமார் கலை இயக்கத்தில் பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்ய யானிக் பென் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். பக்கா என்டர்டெய்னிங் திரைப்படமாக உருவாகும் ஜீனி திரைப்படத்தை ஃபேன் இந்தியா படமாக வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையோடு தொடங்கப்பட்டிருக்கிறது. இன்று ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற ஜெயம் ரவியின் 32 வது திரைப்படமான ஜீனி திரைப்படத்தின் படப் பூஜையின் புகைப்படம் இதோ…
 

As the lamp is lit, @actor_jayamravi's #Genie starts rolling! 🥁

Prod by @VelsFilmIntl @IshariKGanesh

An @arrahman Musical
An #ArjunanJr Magical @IamKrithiShetty @kalyanipriyan @GabbiWamiqa @YannickBen2 @PradeepERagav @Ashkum19 @shiyamjack @DoneChannel1 @proyuvraaj pic.twitter.com/xigSbVNZb7

— Vels Film International (@VelsFilmIntl) July 5, 2023

We're thrilled to announce our PAN-INDIAN production that promises to captivate audiences across the World! #Genie Produced by @VelsFilmIntl @IshariKGanesh starring @actor_jayamravi

An @arrahman Musical
An #ArjunanJr Magical@IamKrithiShetty @kalyanipriyan @GabbiWamiqa pic.twitter.com/k7OXmfPt9R

— Vels Film International (@VelsFilmIntl) July 5, 2023

இறுதிக்கட்டத்தில் தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர்… படப்பிடிப்பை முடித்த முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட் இதோ
சினிமா

இறுதிக்கட்டத்தில் தனுஷின் பக்கா ஆக்ஷன் கேப்டன் மில்லர்… படப்பிடிப்பை முடித்த முன்னணி நடிகர்! அதிரடி அப்டேட் இதோ

பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ
சினிமா

பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ

'தலைவா.. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்!- மாமன்னன் பட பாடலுக்காக ARரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்! விவரம் உள்ளே
சினிமா

'தலைவா.. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்!- மாமன்னன் பட பாடலுக்காக ARரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்! விவரம் உள்ளே